Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுடி20 கிரிக்கெட்டிலிருந்து கோலி ஓய்வு பெறணும் ! 'அடித்து நொறுக்கியும்' அடங்காத அக்தர் - கடுப்பில்...

    டி20 கிரிக்கெட்டிலிருந்து கோலி ஓய்வு பெறணும் ! ‘அடித்து நொறுக்கியும்’ அடங்காத அக்தர் – கடுப்பில் ரசிகர்கள்

    விராட் கோலி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டுமென பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார். 

    ஆஸ்திரேலியாவில் 2022-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. இத்தொடரில், கடந்த 23-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடியது. இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி, 159 ரன்கள் எடுத்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 

    தொடர்ந்து தடுமாறிய இந்திய அணியை, விராட் கோலி தனது அபார ஆட்டத்தால் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார். 53 பந்துகளுக்கு 82 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் இறுதிவரை தனது விக்கெட்டை இழக்காமல் இருந்தார். இதனால், ஃபார்மில் இல்லையென்று விராட் கோலியின் மீதான விமர்சனங்கள் குறைந்தன.

    இந்நிலையில், சோயப் அக்தர் விராட் கோலி குறித்து கூறியுள்ளது சர்ச்சையை எழுப்பியுள்ளது. அவர் தெரிவித்துள்ளதாவது:

    என்னைப் பொறுத்தவரை அவர் தன்னுடைய வாழ்நாளில் பாகிஸ்தானுக்கு எதிராக மிகச்சிறந்த இன்னிங்ஸை விளாயாடியுள்ளார். குறிப்பாக, நம்மால் இதை செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் அவர் விளையாடினார். இருப்பினும், கடந்த 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் ரன்களை குவிக்க முடியாமல் கேப்டன்ஷிப் பதவியையும் இழந்த போது அவரைப் பற்றி நிறைய பேர் பேசினார்கள்.

    அதிலும் சிலர் அவரது குடும்பத்தை இழுத்து பேசினார்கள். ஆனால் அதை அடித்து நொறுக்கியுள்ள விராட் கோலி தீபாவளிக்கு முன்பாக சரவெடியான இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். இது தான் நாம் கம்பேக் கொடுக்க சிறந்த இடம் என்பதை அவர் முடிவு செய்து விட்டார். அந்த வகையில் கிங் இஸ் பேக், அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் மிகச்சிறந்த வீரர். இருப்பினும் அவர் இருபது ஓவர்  கிரிக்கெட்டில் ஓய்வு பெற வேண்டும். ஏனெனில் அவர் தன்னுடைய முழு சக்தியையும் இருபது ஓவர் கிரிக்கெட்டில் போடுவதற்கு நான் விரும்பவில்லை. இன்றைய ஆட்டத்தை போல் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் விளையாடியிருந்தால் இந்நேரம் 3 சதங்களை அடித்திருப்பார்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    இவரின் இந்த கருத்துக்கு விராட் கோலி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: தப்பிய நயன்தாரா-விக்னேஷ் ஜோடி! வாடகை தாய் விவகாரத்தில் விதிமீறல் இல்லை என அறிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....