Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தப்பிய நயன்தாரா-விக்னேஷ் ஜோடி! வாடகை தாய் விவகாரத்தில் விதிமீறல் இல்லை என அறிக்கை

    தப்பிய நயன்தாரா-விக்னேஷ் ஜோடி! வாடகை தாய் விவகாரத்தில் விதிமீறல் இல்லை என அறிக்கை

    நயன்தாரா-விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தை விவகாரத்தில் விதிமுறைகள் மீறப்படவில்லை என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இந்த ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமான நான்கே மாதங்களில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக இந்த மாதம் 9 ஆம் தேதி விக்னேஷ் சிவன், தனது சமூக வலைதளபக்கத்தில் அறிவித்தார். இவர்கள் வாடகை தாய் வாயிலாக குழந்தைகளை பெற்றதாக தகவல் வெளியானது.

    வாடகை தாய் சட்டப்படி, திருமணமாகி ஐந்து ஆண்டுகள் வரை குழந்தைப்பேறு இல்லாதவர்கள்; தம்பதியரில் ஒருவர் குழந்தைப்பேறுக்கு தகுதியான உடல்நிலை இல்லாத பட்சத்தில் உரிய விதிகளை பின்பற்றி வாடகை தாய் மூலம் கேஸுகந்தியை பெற்று கொள்ளலாம். இந்த தகவல் இருக்க, நயன்தாரா விவகாரத்தில் நான்கு மாதங்களிலேயே இரட்டை குழந்தை பெற்றது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. 

    இது தொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக சேவை நலப்பணிகள் இயக்க இணை இயக்குனர் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், விசாரணை முடிந்து, இதற்கான அறிக்கையை டி.எம்,எஸ் இயக்க அதிகாரிகள் தயார் செய்துள்ளனர். 

    இதையும் படிங்க: முதல்வருக்கே இந்த கதியா? பிரதமர் மோடியின் பயணத்தின் போது நடந்த அதிர்ச்சி சம்பவம்

    நேற்று மாலை வெளியிடப்பட்ட அந்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    இந்த விசாரணையில், நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி மற்றும் வாடகை தாய் ஆகியோருடைய வயது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன (ஐ.சி.எம்.ஆர்.) செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகை தாய் முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிய வந்தது. ஐ.சி.எம்.ஆர்.-ன் வழிகாட்டு நெறிமுறைகளின் பிரிவின்படி, வாடகை தாய்க்கு உரிய தகுதியான வயதிலும், அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உயிருடன் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. 

    நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி பதிவு திருமணம் நடைபெற்றதாக பதிவு சான்றிதழ் மருத்துவமனை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. அத்திருமண பதிவு சான்றிதழின் உண்மைத்தன்மை பதிவு துறையால் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

    ஐ.சி.எம்.ஆர்.-ன் வழிகாட்டு நெறிமுறைகளின் பிரிவின்படி நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்த மருத்துவச்சான்று விசாரணை குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

    தனியார் மருத்துவமனையில் தம்பதிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை விசாரித்தபோது 2020-ம் ஆண்டில் அவர்களது குடும்ப மருத்துவரால் வழங்கப்பட்ட பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் சிகிச்சை அளித்ததாக குறிப்பிட்டார். 

    அக்குடும்ப மருத்துவரின் முகவரியில் விசாரணை செய்தபோது இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அத்தொலைபேசி எண்கள் உபயோகத்தில் இல்லை என்றும், மேலும் விசாரணையில் அந்த மருத்துவர் வெளிநாடு சென்றுவிட்டதாகவும் தெரியவருவதால் அந்த குடும்ப மருத்துவரிடம் குழு விசாரணை மேற்கொள்ளவில்லை.

    இதையும் படிங்க: நயன்தாரா விவகாரத்தில் சிக்கப்போகும் தனியார் மருத்துவமனை! இன்று மாலை வெளிவரவுள்ள ரகசியம்

    சினைமுட்டை சிகிச்சை சம்பந்தமான நோயாளியின் சிகிச்சை பதிவேடுகள் மருத்துவமனையால் முறையாக பராமரிக்கப்படவில்லை. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சினைமுட்டை மற்றும் விந்தணு பெறப்பட்டு கருமுட்டைகள் உருவாக்கப்பட்டு உறைநிலையில் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வாடகை தாய் ஒப்பந்தம் போடப்பட்டது. 

    இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதத்தில் கருமுட்டைகள் வாடகை தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டு, இக்குழந்தைகள் அக்டோபர் மாதம் பிரசவிக்கபட்டுள்ளதாக தெரிய வருகிறது. 

    செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் வாடகை தாய் உறவினராக இருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இச்சட்டத்திற்கு முந்தைய ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதலின்படி உறவினர் அல்லாதோர் வாடகை தாயாக செயல்படவும், அவசிய செலவுக்கு மட்டும் பணம் வழங்கும் வழிமுறையும் இருந்தது. 

    அறுவை சிகிச்சை விசாரணையில் வாடகை தாய் பேறுகாலத்தின்போது சென்னையில் தனியார் ஆஸ்பத்திரியில் பேறுகால பராமரிப்பு சிகிச்சை பெற்று வந்துள்ளார். கருக்கள் வளர்ந்த நிலையில் இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளது. அக்குழந்தைகள் கடந்த 9-ந் தேதி நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியிடம் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க:சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகள்: பல்கலைக்கழகங்களுக்கு மானியக்குழு பிறப்பித்த அதிரடி உத்தரவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....