Friday, March 15, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புசைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகள்: பல்கலைக்கழகங்களுக்கு மானியக்குழு பிறப்பித்த அதிரடி உத்தரவு

    சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகள்: பல்கலைக்கழகங்களுக்கு மானியக்குழு பிறப்பித்த அதிரடி உத்தரவு

    பல்கலைக்கழகங்களில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

    பல்கலைக்கழக மானியக்குழு தற்போது பலவித யோசனைகளிலும், சோதனை முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், யோசனையின் விளைவாக, அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழங்களுக்கும் விடுத்துள்ள சுற்றறிக்கையில், இணையப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அதனை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க முடிவெடுத்துள்ளது.

    அதன்படி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

    இந்த பாடத்திட்டமானது அதிக விழிப்புணர்வு, பாதுகாப்பான மற்றும் பொறுப்பான சைபர் பாதுகாப்பை உறுதி செய்யும் என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது. இந்த பாடப்பிரிவுக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், இந்த பாடத்திட்டங்கள் குறித்த விரிவான தகவல் விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

    இதையும் படிங்க: மீண்டெழுமா ஆஸ்திரேலியா? டி20 உலகக்கோப்பையில் ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயத்துடன் இலங்கையுடன் மோதல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....