Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உருகும் பனிக்கட்டியில் மறைந்திருக்கும் புதிய வைரஸ்; ஆராய்ச்சியில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

    உருகும் பனிக்கட்டியில் மறைந்திருக்கும் புதிய வைரஸ்; ஆராய்ச்சியில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

    உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் தொடர்ந்து மோசமாகி வரும் நிலையில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதால் ,எளிதாக நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது .

    சுமார் இரண்டு ஆண்டுகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிறகு, உலகம் மீண்டு வருகிறது. இந்நிலையில் விஞ்ஞானிகள் அடுத்த பெரும் தொற்று வௌவால்கள் அல்லது பறவைகளிடமிருந்து வராமல் பனிப்பாறைகள் உருகுவதால் நிகழ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் வேகமாக பாதித்து வருவது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சொசைட்டி பி பயாலஜிக்கல் சயின்ஸ் என்ற இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வின்போது மண்ணின் மரபணு பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் வைரஸ் கசிவு மற்றும் புதிய பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    வைரஸ் ஸ்பெல் ஓவர் என்பது ஒரு புதிய ஹோஸ்டை எதிர்கொள்ளும் போது, ஒரு வைரஸ் அதை தாக்கி இந்த புதிய ஹோஸ்டில் நிலையாக பரவும் ஒரு செயல் முறையாகும்.

    பனிப்பாறைகள் உருகுவது குறித்து விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஏனெனில், பனிப்பாறைகள் படிந்திருக்கும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் நிரந்தரமாக உறையும் சூழல் ஏற்படலாம். இந்த வைரஸ்கள் வனவிலங்குகளை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனா தொற்று நோய் போல் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

    உலகின் மிகப்பெரிய உயர் ஆர்டிக் நன்னீர் ஏரியானு இருந்து மண் மற்றும் வண்டல் மாதிரிகளை சேகரித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர் இந்த மாதிரிகளில் ஆர்.என்.ஏ மற்றும் டி.என்.ஏ-வை வரிசைப்படுத்தி ஆய்வு செய்ததில் வைரஸ்களின் தாக்கம் இருந்ததாக தெரிவித்துள்ளனர். பனிப்பாறை உருகுவதின் மூலம் ஸ்பெல் ஓவர் ஆபத்து அதிகரிக்கிறது என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டி உள்ளது.

    இந்த வைரஸ்கள் பூமியின் எல்லா இடங்களிலும் உள்ளன. மேலும் இவை பெரும்பாலும் தனது உற்பத்தியை அதிகரிக்கிறது. இந்த வைரஸ்கள் சுயமாக இயங்குவதில்லை சுயாதீனமான உயிரினங்கள் இல்லை. ஒரு வைரஸ் மற்றொரு வைரஸ் உடன் இணைந்து உற்பத்தியை பெருக்குகிறது.

    இந்த வைரஸால் குறிப்பாக, உயர் ஆர்டிக் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தப்பகுதி உலகின் மற்ற பகுதிகளை விட வேகமாக வெப்பமடைகிறது.

    புவி வெப்பமயமாதல் காலநிலை சுற்றுச்சூழல் மாற்றங்கள் உலகளாவிய பாதிப்பு மற்றும் வைரஸ் கசிவு அபாயத்தை அதிகரிக்கலாம் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2021 ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் பணிப்பாறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட போது, 15 ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்திருந்த 33 வைரஸ்களை கண்டுபிடித்தனர். இவற்றில், 28 நோபல் வைரஸ்கள் ஆகும் புவி வெப்பமடைதல் காரணமாக உருகும் திபெத்திய பணிப்பாறையில் புதிதாக கண்டெடுக்கப்பட்ட வைரஸ்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: தமிழ் திரைப்படத் தயாரிப்பில் இறங்கும் எம் எஸ் தோணி: வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....