Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தீபாவளி விருந்தாக வந்த திரைப்படங்களின் வசூல் என்னவென்று தெரியுமா?

    தீபாவளி விருந்தாக வந்த திரைப்படங்களின் வசூல் என்னவென்று தெரியுமா?

    தீபாவளிக்கு திரைக்கு வந்த பிரின்ஸ் மற்றும் சர்தார் திரைப்படத்தின் வசூல் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    தீபாவளி என்றால் பட்டாசு எந்தளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு திரைப்படங்களையும் முக்கியமாக தமிழகத்தில் கருதுவர். பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் தீபாவளி வெளியிடாக வருவது வாடிக்கையான ஒன்றே. 

    அந்த வகையில், இந்த வருடம் தீபாவளிக்கு நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படமும், கார்த்திக்கின் சர்தார் திரைப்படமும் திரைக்கு வந்தன. இந்த இரு திரைப்படங்களில், சர்தார் நல்ல வரவேற்பை பெற, பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. 

    இந்நிலையில், இரு திரைப்படங்களின் வசூல் விவரங்களும் வெளிவந்துள்ளது. அதனடிப்படையில், கார்த்தியின் சர்தார் திரைப்படம் இதுவரையில் 50 கோடிக்கு அதிகமாகவும், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் 40 கோடிக்கு அதிகமாகவும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

    தீபாவளி சமயமென்பதால் வசூல் ஒரளவுக்கு வந்துள்ளது. ஆனால், இதன்பிறகு வசூல் வேகம் குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சர்தார் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக, சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனால், சர்தார் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். 

    இதையும் படிங்க: டி20 கிரிக்கெட்டிலிருந்து கோலி ஓய்வு பெறணும் ! ‘அடித்து நொறுக்கியும்’ அடங்காத அக்தர் – கடுப்பில் ரசிகர்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....