Saturday, March 16, 2024
மேலும்
    Homeஅறிவியல்கூகுள் அறிவித்துள்ள ரூ. 25 லட்சம் பரிசு - நீங்களும் ஜெயிக்கலாம்!

    கூகுள் அறிவித்துள்ள ரூ. 25 லட்சம் பரிசு – நீங்களும் ஜெயிக்கலாம்!

    குறையைக் கண்டுபிடித்து சொல்லும் நபர்களுக்கு 25 லட்சம் ரூபாய் வரை பரிசு அளிக்க போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

    கூகுள் நிறுவனம் இணைய உலகில் பெரும் ஆளுமை படைத்த நிறுவனமாக  திகழ்கிறது. ஓபன் சௌர்ஸ் ப்ரொஜெக்ட்களில் (Open Source Projects) கூகுள் நிறுவனம் தற்போது இயங்கி வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்திருந்தது. முக்கியமாக கடந்த ஆண்டு ஓபன் சௌர்ஸ் ப்ரொஜெக்ட்கள் மீது தாக்குதல்கள் 650 சதவீதம் வரை அதிகரித்து இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்திருந்தது. 

    இந்நிலையில், தற்போது கூகுள் நிறுவனம் பரிசுத்தொகை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

    திறந்த மூல மென்பொருள் இயங்குதன்மை வெகுமதிகள் (Open Source Software Interoperability Rewards Program) என்ற திட்டத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பல்வேறு வகையிலான பரிசுகளை அளிக்க உள்ளது. 

    இத திட்டத்தில் கூகிள் மென்பொருளில் உள்ள கிட்ஹப் ஆக்ஷன்ஸ் (GitHub actions), அப்ளிகேஷன் கான்ஃபிகரேஷன் (application configurations), ஆக்சஸ் கண்ட்ரோல் ரூல்ஸ் (access control rules) ஆகியவற்றிலிருந்து பிழைகளைக் கண்டறியும் நபர்களுக்கு 100 டாலர்களில் தொடங்கி, 31,337 டாலர்கள் வரை பரிசு வழங்கப் போவதாக தெரிவித்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 25 லட்சம் ரூபாய் ஆகும். 

    இதையும் படிங்க   : இனி பிறக்கும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.60 ஆயிரம் உதவித்தொகை – தென்கொரியா அதிரடி முடிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....