Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இனி பிறக்கும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.60 ஆயிரம் உதவித்தொகை - தென்கொரியா அதிரடி முடிவு

    இனி பிறக்கும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.60 ஆயிரம் உதவித்தொகை – தென்கொரியா அதிரடி முடிவு

    கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில் சமீபகாலமாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது அரசுக்கு பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது. மேலும், குறிப்பிடத்தக்க வகையில் 2021-ல் நாட்டின் பிறப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.

    கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, தென் கொரியாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 266,600 ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 11,800 குறைவு. அதே போன்று சதவீத அடிப்படையில் 4.3 சதவீதமும் குறைவு. இருப்பினும், 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடையே கருவுறுதல் விகிதம் கடந்த ஆண்டு சற்று அதிகரித்துள்ளது என்பது மகிழிச்சிகரமான செய்தி.

    மேலும் 1970 இல், தென் கொரியாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 10 மில்லியனைத் தாண்டியது. ஆனால் அதன் பிறகு தென் கொரியாவில் இந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது. 2001 இல், இந்த எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது. அதாவது அந்த ஆண்டு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 5 லட்சமாக குறைந்தது. 2002ல் இது 4 லட்சமாக குறைந்து உள்ளது. வளர்ந்த நாடான தென்கொரியாவின் தற்போதைய மக்கள் தொகை 5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

    தென் கொரியாவில் மக்கள் தொகை வெகுவாக குறைந்து வரும் நிலையில், மக்கள் தொகையை அதிகரிக்கும் வகையில், நாட்டில் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.60 ஆயிரம் உதவித்தொகை வழங்க தென்கொரிய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால், தென் கொரிய அரசு கருவுறுதலை ஊக்குவிக்கவும், குறையும் பிறப்பு விகிதம் பிரச்சனைக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி, புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மாதாந்திர உதவித்தொகையாக இந்திய மதிப்பில் 60 ஆயிரம் ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளது. ஒரு வருடம் வரை முழு உதவித்தொகை மற்றும் 2 ஆம் ஆண்டில் அரை உதவித்தொகை என அறிவித்து உள்ளது. தென் கொரியா மக்களுக்கு இச்செய்தி மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்து உள்ளது.

    இதையும் படிங்க  : தென்னைக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு தெரியுமா? – உலக தேங்காய் தின ஸ்பெஷல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....