Sunday, March 17, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரைதென்னைக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு தெரியுமா? - உலக தேங்காய் தின ஸ்பெஷல்!

    தென்னைக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு தெரியுமா? – உலக தேங்காய் தின ஸ்பெஷல்!

    இந்தியர்களை பொறுத்தவரையில் தேங்காய் என்பது அன்றாடம் உபயோகிக்க கூடிய ஒன்று. உணவுச் சார்ந்தோ, கலாச்சாரம் சார்ந்தோ தேங்காயின் பங்கு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். காலையில் எழுந்து உணவுப் பொருளில்  ஆரம்பித்து, கடவுள் வழிபாட்டில், எண்ணெய் பிரித்தெடுப்பதில், தேங்காய் சிரட்டைகளை கொண்டு பொருள் செய்வதில் என தேங்காயின் பங்கு அன்றாட வாழ்வில் அளப்பரிய ஒன்றாக இருந்து வருகிறது. 

    இப்படியாக தேங்காயின் முக்கியத்துவம் வாய்த்திருக்க,  உலகெங்கிலும் தென்னை சாகுபடி செய்யும் நாடுகள் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 2-ம் தேதியை உலக தேங்காய் தினமாக கடைபிடித்து வருகின்றன. இந்த தேங்காய் தினமானது, இந்தியா உள்ளிட்ட தேங்காய் அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளின் ஒருங்கிணைந்த அரசு அமைப்பான ‘ஆசிய பசிபிக் தேங்காய் சமூகம்’ உருவாக்கப்பட்ட தினத்தை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது. 

    மேலும், இந்த நாளில் தென்னை மரத்தின் பலன்கள், அதன் மூலம் விவசாயிகள் அடையக்கூடிய லாபம், தென்னை மரத்தின் முக்கியத்துவம், தொழிலில் தென்னை மரத்தின் பங்கு என தென்னை சார்ந்த பலவித நிகழ்வுகள் மக்கள் மத்தியிலும், விவசாயிகள் மத்தியிலும் ஏற்படுத்தப்படும். 

    தமிழர்களும் தென்னையும்

    தமிழர்களுக்கும் தென்னைக்கும் உள்ள வரலாறு இயல்பானது , இயற்கையானது. ஆம், தென்னை மரத்தை ‘தெங்கு’ என்றழைப்பர். கடற்கரைப்பகுதிகள் முதல் மலையடிவாரம் வரை இந்த தென்னந்தோப்புகள் நிறைந்து காணப்படும். வங்கக் கடல் வழியாகவே தமிழகத்தில் தென்னை பயிரினங்கள் பரவியிருக்கலாம் என்று பயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 

    பழங்காலம் தொட்டே தமிழர்களின் அன்றாட வாழ்வில் தேங்காய் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கோவில் வழிபாடுகளில் மிகவும் முக்கியமானதாக இது கருதப்படுகிறது. பிள்ளையார் கோவில்களிலும், சிறுதெய்வ கோவில்களிலும் தேங்காயை உடைக்கும் வழக்கம் நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. மேலும், நாட்டுப்புற வழிபாடுகளில் தென்னம் பானை செழிப்பின் சின்னமாக பார்க்கப்படுகிறது. ஆதலால், தென்னம்பானை நாட்டுப்புற வழிபாடுகளில் தவறாது இடம்பெற்றுவிடும். 

    தேங்காயை பொறுத்தவரையில் யாழ்ப்பாணம் தேங்காய் மிகச்சிறப்பாக பேசப்படுகின்றது. மேலும், இந்த யாழ்ப்பாணம் தேங்காயின் ஓடுகளே பிச்சைக்காரர்கள் திருவோடாக பயன்படுத்துகின்றனர். அளவில் பெரியதாக யாழ்ப்பாணம் தேங்காயின் ஓடுகள் இருக்கும். 

    வரலாற்றைப் பொறுத்தவரையில், கி.பி.ஏழாம் நூற்றாண்டு அதாவது நந்தி  வர்மனின் தண்டந்தோட்டம் சேப்பேடுகளிலேயே தென்னை குறித்த வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இதை பேராசிரியர் தொ.பரமசிவன் தனது பண்பாட்டு அசைவுகள் ஆய்வுக்கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதன்படி, அந்த செப்பேட்டில் ‘ இம்மனை உள்ளிட்ட தெங்கும் பனையும் ஈழவர் ஏறப்பெறராகவும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே காலக்கட்டத்திலேயே தெங்கு நின்ற நந்தவனம் என்ற தொடரையும் காணமுடிகிறது. ஆதலால், ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தென்னையின் பயன் தமிழக்கதில் இருந்து வந்துள்ளதை அறிய முடிகிறது. அதே சமயம் ஏழாம் நூற்றாண்டு குறிப்புகளின்படி, தென்னை வழிபாட்டு பொருட்களுள் ஒன்றாக இருந்ததாக புலப்படவில்லை என்றும் தொ.பரமசிவன் குறிப்பிடுகிறார். 

    இருப்பினும், அச்சமயத்தில் பனையை போலவே தெங்கு எனப்படும் தென்னை ஓலைக்கும், கள்ளுக்கும், விரகுக்கும், சமையல் கட்டுமானப் பொருட்களுக்கும் பயன்பட்டு வந்துள்ளதை அறிய முடிகிறது. பிற்காலத்தில் தென்னை ஓலைகளைக் கொண்டு அழுகுப்பட பந்தல் அமைத்தலும் பிரபலாமாகியுள்ளது. இதை ஒரு கலையாகவே நம் முன்னோர்கள் மதித்து வந்துள்ளனர் என்பதையும் ஆய்வு கட்டுரைகளில் நம்மால் அறிய முடிகிறது. 

    தேங்காய் உற்பத்தியில் இந்தியா 

    மிக நீண்ட காலம் நீடித்து வாழும் பயிரினங்களில் தென்னை இனம் முக்கியமானது. தற்போதைய காலக்கட்டத்தை பொறுத்தவரையில் பொருளாதார ரீதியாகவும் தென்னை மீப்பெரும் பங்கை வகிக்கிறது. உலகளவில் அதிக அளவில் தேங்காய் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா விளங்கி வருகிறது. 2021-ம் ஆண்டின்படி உலகளவில் ஒட்டுமொத்த தேங்காய் உற்பத்தியில் 34 சதவீதத்தை இந்தியா பூர்த்தி செய்தது குறிப்பிடத்தக்கது. 

    தேங்காய் (எண்ணெய்) சிறந்த ஈரமூட்டியாகவும், இன்சூலின் எதிர்ப்பை மேம்படுத்தவும், நார்ச்சத்து உள்ளதாகவும், நீரிழப்பைத் தடுப்பதற்கு தேவையான முதன்மை சத்துகளை கொண்டதாகவும் விளங்குகிறது. 

    COCO

    வரலாற்றையும், பொருளாதாரத்தையும், வாழ்வியலையும், உடல் நலனையும் ஒருங்கே வெளிப்படுத்தக்கூடிய ஒரு இயற்கையான சின்னமாகவே தேங்காயைத் தரும்  தென்னை விளங்கி வருகிறது. 

    ஷவர்மா தயாரிக்க உரிமம் -கேரள அரசு விதித்த அதிரடி முடிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....