Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஷவர்மா தயாரிக்க உரிமம் -கேரள அரசு விதித்த அதிரடி முடிவு

    ஷவர்மா தயாரிக்க உரிமம் -கேரள அரசு விதித்த அதிரடி முடிவு

    கேரளாவில் ஷவர்மா தயாரிக்க உரிமம் பெற வில்லையென்றால் ,உரிமம் பெறாத கடைகள் மீது அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு , 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கேரளா அரசு அறிவித்துள்ளது.

    பெரும்பாலும் ஷவர்மா திறந்த வெளியில் ,அதுவும் வாகனப்போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் தயாரிக்கப்படுகிறது .இதனால் அதன் மீது படும் தூசிகளால் எளிதில் நோய் கிருமிகள் தொற்றிக்கொண்டு ,பல விதமான உடல் உபாதைகளை ஏற்பட வாய்ப்புள்ளது . இதனால் அண்மையில் கேரளாவில் நிறைய உயிரிழப்புகளும் ஏற்பட்டு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது .

    இதனை தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த கேரள அரசு தற்போது புதிதாக சில கட்டுப்பாடுகளையும் ,ஷவர்மா தயாரிப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது . அதில், ஷவர்மா தயாரிக்க உரிமம் பெற தவறினால் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிப்பதுடன், 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது .

    அதுமட்டுமின்றி ஷவர்மாவை திறந்த சூழலில் தயாரிக்க கூடாது என்றும், 4 மணி நேரம் கழித்து ஷவர்மாவில் மீதமுள்ள இறைச்சியை பயன்படுத்த கூடாது என்றும் கூறியுள்ளது . அதேபோல், பார்சலில் தேதியையும், பார்சல் வாங்கிய ஒரு மணி நேரத்திற்குள் அதை சாப்பிட வேண்டும் என்பதையும் துல்லியமாக குறிப்பிட்டுள்ள அரசு ,கூடுதலாக சமையல் காரர்கள் உணவு பாதுகாப்பு பயிற்சி சான்றிதல் பெற்றிருக்க வேண்டும் என்றும் ,அங்கீகரிக்கப்பட்ட சப்ளையர்களிடம் இருந்து மட்டுமே, சமையல் பொருட்களை வாங்க வேண்டும் எனவும் பல வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்துளளது .

    மேலும் புதிய செய்தியை காணுங்கள் : கடைசி பழங்குடி மனிதரும் உயிரிழப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....