Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்கடைசி பழங்குடி மனிதரும் உயிரிழப்பு

    கடைசி பழங்குடி மனிதரும் உயிரிழப்பு

    பிரேசிலில் இருக்கும் அமேசான் மலைக்காடுகள் உலகிலேயே மிகப்பெரிய வனப்பகுதியாகும். இந்த அமேசான் காடுதான் பூமியின் தட்ப வெப்பத்தை பெரிய அளவில் காத்து வருகிறது. இந்த அடர்ந்த காட்டுக்குள் பழங்குடி இன குழுக்கள் பலரும் வசித்து வந்தனர்.

    ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே ஆக்கிரமிப்பாளர்கள் அமேசான் காடுகளை அழித்து வருவதாகவும், அங்கு வாழும் பழங்குடியினரான பூர்வ குடிகளை கொன்று குவித்து வருவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. பல்வேறு காலகட்டங்களில் பழங்குடியின குழுக்கள் கொல்லப்பட்டு வந்துள்ளனர். அந்த வகையில், பெயரிடப்படாத பழங்குடியின குழு ஒன்றை சேர்ந்த பலர் 1970 வாக்கில் கொல்லப்பட்டனர்.

    அவர்களில் 7 பேர் மட்டுமே வாழ்ந்து வந்த நிலையில், 1995ஆம் ஆண்டில் சட்டவிரோத சுரங்க ஆக்கிரமிப்பாளர்களால் ஆறு பேர் கொல்லப்பட்டனர். எஞ்சிய ஒருவர் மட்டும் அமேசான் காடுகளில் வாழ்ந்து வந்தார். அவரது பெயர் என்ன, என்ன மொழி பேசுவார் என எந்த தகவல்களும் யாருக்கும் தெரியாது. அவரை வெளி உலகத்தினர் தொடர்பு கொள்ள முயன்ற போதும் அதை தவிர்க்கவே செய்தார். எந்த உதவிகளும் பெற அவர் முன்வரவில்லை.

    இதனை தொடர்ந்து, பழங்குடியின குழுவின் கடைசி நபராக கருதப்பட்ட அடையாளம் தெரியாத பழங்குடி மனிதர் காலமானார். அவரது மரணம் ஆர்வலர்களிடையே பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. மரணித்த பழங்குடி மனிதர், Índio do Buraco அல்லது “பதுங்குகுழியின் பழங்குடி மனிதர்” என்று அறியப்பட்டார் என தி கார்டியன்  செய்தி வெளியிட்டுள்ளது .

    மரணித்த அந்த பழங்குடியின நபர் உள்ளூர் ஊடகங்களில் நிறைய காட்டப்பட்டார்.. பல ஆவணப்படங்களில் கூட இடம்பெற்றார். “அவர் யாரையும் நம்பவில்லை, ஏனென்றால் அவர் பழங்குடியினரல்லாத மக்களுடன் அவருக்கு, பல அதிர்ச்சிகரமான அனுபவங்கள் ஏற்பட்டன,” என்று ஓய்வுபெற்ற ஆய்வாளரான மார்செலோ டாஸ் சாண்டோஸ் தி கார்டியனிடம் கூறினார்.

    பிரேசிலில் உள்ள பழங்குடியினருக்கான அமைப்பான புனாய் கூறுகையில் “நாங்கள் தொடர்ந்து அமேசான் காட்டில் பழங்குடியியினரின் கடைசி மனிதரை கண்காணித்து வந்தோம். சமீபகாலமாக உடலில் பசுந்தழைகளையும், பறவைகளின் இறக்கைகளையும் கட்டியிருந்தார். இவ்வாறு பழங்குடியினர் இருப்பது அவர்கள் இறப்புக்கு தயாராவதைக் குறிக்கும்.

    மேலும் பள்ளங்களை தோண்டி வைத்து அதன் மூலம் விலங்குகளை வேட்டையாடி உண்டு வந்த அந்த இறுதி பழங்குடி நபருக்கு ‘Man of the Hole’ என்று பெயர் வைக்கப்பட்டது. தனியொருவராக 26 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த அவர் மிக அரிதாகவே மனித கண்களுக்கு தென்பட்டார். அவர் வைக்கோல், ஓலைகளை கொண்டு அவர் வீட்டினை கட்டி வாழ்ந்து வந்துள்ளார். இது தவிர சோளம், கிழங்கு போன்றவற்றை விளைவித்தும், தேன் மற்றும் பப்பாளிப்பழங்களை உண்டும் அவர் வாழ்ந்து வந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

    இந்த நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி அந்த கடைசி மனிதரின் உடல் உயிரிழந்தநிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மனிதருக்கு ஏறக்குறைய 60 வயது இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர் இறந்துவிட்ட காரணத்தால் தற்போது அமேசான் காட்டில் பூர்வ பழங்குடியினர் யாரும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது, பிரேசிலில் 300-க்கும் குறைவான பழங்குடியினர் இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், அந்த எண்ணிக்கை மெதுவாக குறைந்து வருகிறது. இன்னும் 30 குழுக்கள் உள்ளன. ஆனால், நிபுணர்களிடம் அவர்களை பற்றிய எந்த ஒரு தகவலும் இல்லை.

    உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் மலைக்காடுகளில் வாழும் இந்த பூர்வ குடிமக்கள் இன்று வாழ முடியவில்லை என்பது நாகரீகம் அடைந்தோர் என்று சொல்லிக்கொள்ளும் மனிதர்களுக்கு ஒரு பெரும் இழுக்காகும். பழங்குடி மக்களைப் பாதுகாப்பது நமது கடமையாகும்.

    அட்டகாசம் செய்யும் விஜய் – சீதா ஜோடிக்கு அழகான மூன்று புலிக்குட்டிகள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....