Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஹெலிகாப்டரில் வந்து மாஸ் காட்டிய சிம்பு - இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு

    ஹெலிகாப்டரில் வந்து மாஸ் காட்டிய சிம்பு – இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு

    வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சிம்பு ஹெலிகாப்டரில் வந்து இறங்கியது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தின் மூலம் கொடுத்த கம்-பேக்கை எவராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. சிம்பு நடிகர் சிம்புவாக மீண்டும் வந்துவிட்டார் என்று அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியும், நம்பும்படியும் மாநாடு திரைப்படமும் சிம்புவின் நடிப்பும் இருந்தது.

    மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படமும், பத்து தல என்ற திரைப்படமும் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில், ஏற்கனவே, வெளிவந்த வெந்து தணிந்தது காடு  திரைப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த டீசரின் பின்னணியில் ஒரு பாடல் ஒலிக்கும். அப்பாடலும் ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. 

    இதைத் தொடர்ந்து, வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏ.ஆர். ரஹ்மான், உலகநாயகன் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின், கௌதம் வாசுதேவ் மேனன் போன்றோர் கலந்துக்கொண்டனர். 

    இந்நிலையில், இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு இத்திரைப்படத்தின் கதாநாயகன் சிம்பு ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். சிம்பு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய காணொலியானது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    மேலும், தற்போது வெளிவந்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ட்ரைலரும், பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்னதாக, ஏ.ஆர்.ரஹ்மான் – கௌதம் வாசுதேவ் மேனன்-சிலம்பரசன் கூட்டணி விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற திரைப்படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க : இன்று கிரிக்கெட்டர்.. நாளை ஹோட்டல் அதிபர் – விராட் கோலி அதிரடி முடிவு

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....