Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇனி சென்னையில் பேருந்து பயணம் சுலபம்; வந்துவிட்டது புதிய தொழில்நுட்ப வசதி!

    இனி சென்னையில் பேருந்து பயணம் சுலபம்; வந்துவிட்டது புதிய தொழில்நுட்ப வசதி!

    சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பயணிகள் பேருந்துகளில், பேருந்து நிறுத்தத்தை அறியும் வகையில் ஜிபிஎஸ் தொழில்நுட்ப சேவைத் தொடங்கப்பட்டுள்ளது. 

    சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஜிபிஎஸ் மூலம் பேருந்துகளின் நிலையைத் தெரிந்துகொள்ள ஏதுவாக அனைத்து மாநகர பேருந்துகளிலும் ஜிபிஎஸ் தொழில்நுட்பக் கருவி பொருத்தப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து தற்போது, பேருந்து நிறுத்தத்திற்கு முன்னதாக உள்ள நிறுத்தத்தை ஜிபிஎஸ் வசதியின் மூலம் அறிந்துகொள்ளக் கூடிய வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தமுறை தற்போது சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பயணிகள் பேருந்துகளில் கொண்டுவரப்பட்டுள்ளது. 

    இந்த வசதிகள் முதல்கட்டமாக, 500 பேருந்துகளில் 6 ஒலிபெருக்கி சாதனம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், 1000 பேருந்துகளுக்கு இந்த வசதியை விரிவுபடுத்துவதற்கான பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த ஜிபிஎஸ் சேவையின் மூலம், 200 முதல் 250 மீட்டர் முன்னதாகவே அடுத்த நிறுத்தத்திற்கான அறிவிப்பு வெளியாகும். இதன்மூலம், பயணிகள் நிறுத்தத்தை பற்றிய எண்ண கவலை இல்லமால், நிம்மதியாக பேருந்தில் பயணிக்கலாம்.

    இதையும் படிங்க : 23 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ் அப் முடக்கம் – பயனாளர்கள் கலக்கம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....