Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்சர்வதேச திரைப்பட விழாவில் 'கார்கி' - சாய்பல்லவி உற்சாகம்!

    சர்வதேச திரைப்பட விழாவில் ‘கார்கி’ – சாய்பல்லவி உற்சாகம்!

    சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி திரைப்படத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

    சாய் பல்லவி 2015-ம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் கதாநாயாகியாக உருவெடுத்தார். தென்னிந்திய அளவில் சாய் பல்லவி நடித்த மலர் என்ற கதாப்பாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சாய் பல்லவிக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன. இருப்பினும், சரியான கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார். எந்த ஒரு திரைப்படத்திலும் வெறுமனே வந்து செல்லும் கதாநாயகியாக சாய் பல்லவி இதுவரை நடிக்கவில்லை என்ற கருத்து ரசிகர்களிடையே பரவலாக காணப்படுகிறது. 

    இந்நிலையில், கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக கார்கி எனும் திரைப்படத்தில் நடித்தார். நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் இந்தத் திரைப்படத்தை கடந்த ஜூலை 15-ம் தேதி வெளியிட்டது. கார்கி திரைப்படம் வெளியான நாள் தொட்டு பல நேர்மறையான விமர்சனங்கள் இத்திரைப்படத்துக்கு கிடைத்தன.

    குறிப்பாக, இத்திரைப்படத்தின் கதாநாயகி சாய் பல்லவிக்கும், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த காளி வெங்கட்டுக்கும் பாராட்டுகள் குவிந்தன என்றே சொல்லலாம். இதைத் தொடர்ந்து திரைப்படம் ஓடிடியில் வெளியாகி இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. கார்கி வெளியானதில் இருந்தே இந்தப் படத்திற்கு ஏராளமான விருதுகள் கிடைக்கும் என சொல்லப்பட்டது. 

    இந்நிலையில், தற்போது கார்கி திரைப்படம் சர்வதேச அளவில் மிகப் பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. ரஷ்யாவில் நடைபெறும் 44-வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக Blockbusters From Around The World  என்ற பிரிவில் கார்கி திரைப்படம் திரையிடப்படுகிறது. 

    இந்த அறிவிப்பு கார்கி படக்குழுவினரை மட்டுமன்றி தமிழ் திரையுலகை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இதையும் படிங்க : மோடிக்கு ஆதரவாக சமந்தா பேச்சு – திடீரென வைரலாகும் வீடியோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....