Sunday, March 17, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்எல்லாம் முடிஞ்சிருச்சு! - எலான் மஸ்க்கிற்கு ட்விட்டர் நிறுவனம் அனுமதி!

    எல்லாம் முடிஞ்சிருச்சு! – எலான் மஸ்க்கிற்கு ட்விட்டர் நிறுவனம் அனுமதி!

    ‘ட்விட்டர்’ நிறுவனத்தை, எலான் மஸ்க் வாங்குவதற்கான அனுமதியை வழங்கி உள்ளது, ட்விட்டர் நிர்வாக குழு.

    எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் 9 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை விலைக்கு வாங்கினார். இதன் மூலம் அதிகமாக பங்குகளை வைத்திருக்கும் தனிநபர் என்ற பெருமையைப் பெற்றார். ஆனால், ட்விட்டர் நிர்வாகக் குழுவில் அழைப்பு விடுக்கப்பட்டபோது, அதில் இணைவதற்கு எலான் மஸ்க் மறுத்துவிட்டார்.

    அடுத்த சில நாட்களில் ட்விட்டர் சமூக வலைதளத்தை 4400 கோடி டாலருக்கு நானே வாங்கிக்கொள்கிறேன் என்று எலான் மஸ்க் அறிவித்தார். ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பங்கையும் 54.20 டாலருக்கு வாங்க விரும்புவதாகவும் எலான் மஸ்க் பங்குச்சந்தையில் பைலிங்கில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கும், எலான் மஸ்கிற்கும் ஒப்பந்தம் கையொப்பமானது. ஆனால், திடீரென ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் தனது முடிவை ஒத்திவைப்பதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.

    இதற்கு காரணம், ட்விட்டர் நிறுவனத்தில் ஏராளமான போலிக் கணக்குகள் இருப்பதால், அதுதொடர்பாக தகவல்கள் தேவை என்று எலான் மஸ்க் கோரியிருந்தார். ஆனால் ட்விட்டர் நிறுவனம் அந்தப் போலிக் கணக்குகள், ஸ்பாம் குறித்த விவரங்களை வழங்கவில்லை. இது தொடர்பாக பலமுறை ட்விட்டர் நிறுவனத்துக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க்குடனான ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டதேத்தவிர அந்தவிவரங்களை வழங்கவில்லை. ஆனால், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவில்தான் எலான் மஸ்க் இருக்கிறார் என்று தகவல்கள் வெளிவந்தன.

    இந்நிலைியில் உலகின் மிகப் பெரிய பணக்காரரும், ‘டெஸ்லா’ மின்சார கார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை 3.43 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், அவர் நிறுவனத்தை வாங்குவதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளது, ட்விட்டர் நிர்வாக குழு.

    இருப்பினும், மீண்டும் ட்விட்டரில் உள்ள போலி கணக்குகளின் எண்ணிக்கை, அது குறிப்பிடும் 5 சதவீதத்தை விட அதிகமாக இருக்கும் என எலான் மஸ்க் கருதுகிறார். எனவே, அது சம்பந்தமான வெளிப்படையான கணக்கை தருமாறும்; இல்லை எனில், வாங்கும் முயற்சியை ரத்து செய்துவிட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவை ஒருபுறம் இருப்பினும், ட்விட்டர் நிர்வாக குழு தன்னுடைய ஒப்புதலை வழங்கி உள்ளது.

    பொதுவாகவே அதிரடி நடவடிக்கைகளிற்கு பெயர்போனவர் எலான் மஸ்க். இப்போது ட்விட்டர் நிறுவனம் ஒப்புதல் வழங்கி உள்ளதன் மூலம் விரைவில் அதில் பல அதிரடி மாற்றங்களைச் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பல குழந்தைகள் நிலநடுக்கத்தில் இறந்திருக்கலாம்.. ஆப்கானிய மருத்துவர்கள் வேதனை..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....