Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பல குழந்தைகள் நிலநடுக்கத்தில் இறந்திருக்கலாம்.. ஆப்கானிய மருத்துவர்கள் வேதனை..

    பல குழந்தைகள் நிலநடுக்கத்தில் இறந்திருக்கலாம்.. ஆப்கானிய மருத்துவர்கள் வேதனை..

    ஆப்கானிஸ்தான் நாட்டின் பக்திகா பகுதியில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தினால் இது வரை 1000 பேர் உயிரிழந்துள்ளனர், 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

    ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகிய இந்த நிலநடுக்கமானது பக்திகா பகுதியில் கடும் சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் எவ்வளவு பேர் இறந்துபோயுள்ளார்கள் என்பது இதுவரை முழுதாய் கணக்கிட முடியாத நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தான் நாட்டினைத் தற்போது தாலிபான்கள் ஆட்சி செய்து வருகின்றனர். நிலநடுக்கத்தினால் தங்களது நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு உதவி செய்யுமாறு உலக நாடுகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ‘பாதிக்கப்பட்ட பகுதிகளை எங்களால் தொடர்புகொள்ள முடியவில்லை; அங்கு இருந்த செல்போன் டவர்கள் விழுந்துள்ளன.’ என்று தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

    ஆப்கானிஸ்தானுக்கு உதவுவதற்காக அமெரிக்கா முதற்கொண்டு பல நாடுகள் முன்வந்துள்ளன. நிலநடுக்கம் உருவான மையப்பகுதியில் இருந்த கிராமங்கள் முழுவதுமாய் அழிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் மிகுந்த பயத்தில் உள்ளனர். இறப்பு விகிதமானது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என ஆப்கானிஸ்தானில் உள்ள தன்னார்வலர்கள் கூறுகின்றனர்.

    பக்திகாவில் வசித்து வரும் பெண்மணி ஒருவர் தனது குடும்பத்தில் 19 பேரை இந்த நிலநடுக்கத்தினால் இழந்துள்ளதாகக் கூறியுள்ளார். ‘எங்களது வீட்டின் கூரை இடிந்து விழுந்துவிட்டது. நங்கள் அனைவரும் மாட்டிக்கொண்டோம். எனது தோள்பட்டையானது விலகிவிட்டது. எனது அறையில் என்னுடன் இருந்த 7 பேர்கள் இறந்து விட்டனர்.’ என்று கூறியுள்ளார்.

    ஆப்கானிஸ்தான் நாட்டினை தாலிபான்கள் கைப்பற்றும்போதே அந்த நாடானது பெரும் பொருளாதார சரிவினை சந்தித்திருந்தது. தற்போது அந்த நாட்டில் உணவுப் பஞ்சமானது தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. ஒரு வேலை உணவு கூட கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.

    ஆப்கானிஸ்தான், கடந்த இருபது வருடங்களாக நிலநடுக்கத்தினால் துன்பப்பட்டு வருகிறது. சராசரியாக வருடத்திற்கு 500 பேருக்கும் மேலாக தங்களது உயிரை பறிகொடுத்து வருகின்றனர்.

    ‘இங்கு எதுவும் மிச்சம் இல்லை; எங்களது உடமைகள் இன்னமும் நிலத்திற்கு அடியிலேயே இருக்கின்றன. போர்வைகளோ தங்குவதற்கு இடமோ எங்களுக்கு இல்லை. அனைவரும் திறந்த நிலத்திலேயே படுத்து உறங்கி வருகின்றனர்.’ என்று அங்கு வசிக்கும் நபர் ஒருவர் கூறியுள்ளார்.

    கடந்த பத்து வருடத்தில் மட்டும் நிலநடுக்கத்தினால் 7,000 மக்கள் இறந்துள்ளனர். ஜனவரி மாதம் அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு நிலநடுக்கத்தினால் 20 பொதுமக்களும், ஏராளமான வீடுகளும் அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஆச்சர்யமூட்டும் உலகின் அதிசய இடங்கள்: தெரிந்து கொள்ளுங்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....