Sunday, March 17, 2024
மேலும்
    Homeஆன்மிகம்குல தெய்வத்தை வீட்டிற்கு அழைப்பது எப்படி?

    குல தெய்வத்தை வீட்டிற்கு அழைப்பது எப்படி?

    குலதெய்வம் என்பது ஒருவருடைய வம்சத்தை காக்கும் தெய்வமாகும். பாரம்பரியமாக ஒரு குலத்தை சேர்ந்தவர்களின் வம்சத்தை அடுத்த தலைமுறைகளை காக்கும் தெய்வமாக ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு தெய்வம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

    குல தேவதை என்றும் அழைப்பார்கள். இவர்களை நாம் வணங்கி அந்த தெய்வத்தை மகிழ வைக்க வேண்டும். இல்லாவிட்டால் தெய்வ நிந்தனைக்கு ஆளாக நேரிடும். குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அவர்கள் வாழ்க்கை போராட்டமாக மாறிவிடும்.

    குலதெய்வ அருள் இல்லை என்றால் திருமணத்தடை, புத்திர சோகம், நல்ல வருமானம் இருந்தும் நம்மிடம் பணம் நிலைக்காமல் இருக்கும், தொழிலில் சிறந்து வளர முடியாது, உடல்நிலை கோளாறுகள், மன நிம்மதி இன்மை என பல தொந்தரவுகள் உங்கள் குடும்பத்தில் நடந்து கொண்டேயிருக்கும். குலதெய்வத்தை மிஞ்சிய ஒரு தெய்வம் வேறில்லை என்பது மஹான்களின் வாக்கு. அத்தகைய சிறப்பு வாய்ந்த உங்கள் தெய்வத்தை நீங்கள் வசிக்கும வீட்டிற்குள் எப்படி அழைப்பது என்பதை பற்றி இத்தொகுப்பில் பார்ப்போம் வாருங்கள்.

    சிகப்பு நிற காட்டன் துணி ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய பாத்திரத்தில் கொஞ்சம் போல பன்னீர், வாசனைப் பொருட்களான, ஜவ்வாது ஒரு சிட்டிகை, அக்தர் ஒரு சிட்டிகை, மல்லிகைப்பூ, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்து, அதில் இந்த சிவப்பு துணியை அந்த தண்ணீரில் நனைத்து முதலில் உலர வைத்துக் கொள்ளுங்கள். முனை உடையாத 3 விரலி மஞ்சளை எடுத்து, அதில் இந்த மூன்று மஞ்சளையும் வைத்து, சிகப்பு நூலால் ஒரு முடிச்சுப் போட்டு கட்டிக் கொள்ள வேண்டும்.

    குலதெய்வ அருள்

    பின்பு இந்த முடிச்சுக்கு சந்தன பொட்டு, குங்குமபொட்டு வைத்து, உங்களுடைய வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, இந்த முடிச்சை தீபத்தின் அருகில் வைத்துவிட்டு, குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு, நில வாசப்படியில் ஒரு ஆணியில் இந்த முடிச்சை மாட்டிவிட வேண்டும். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு செய்யலாம்.

    வாசலில் மாட்டிய இந்த முடிச்சுக்கு தினந்தோறும் வீட்டில் தீபம் ஏற்றும்போது, தூபம் காட்ட வேண்டும். மேலும் வீட்டு வாசலில் நிற்க கூடிய தெய்வம் வீட்டிற்குள் வர வேண்டும் என்று பிரார்த்தனை இருக்க வேண்டும். 11 நாள் கழித்து மாலை 6 மணிக்கு, வீட்டில் எப்போதும் வெள்ளிக்கிழமை பூஜை செய்வது போல செய்து, வாசலில் இருக்கும் முடிச்சை அவிழ்த்து பூஜை அறையிலேயே மீண்டும் ஒரு 5 நாட்கள் வைத்து பூஜை செய்து வர வேண்டும்.

    உங்கள் வாசலில் 11 நாட்கள் வாசம் நிறைந்த இந்த மஞ்சளை வைத்து, மனநிறைவோடு வீட்டிற்குள் உங்களது தெய்வத்தை அழைக்கும் போதே, அந்த தெய்வமானது இந்த மஞ்சளில் குடியேறியிருக்கும். அதை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யலாம்.

    பூஜைக்குறிய மந்திரம்: “ஓம் பவாய நம ஓம் சர்வாய நம ஓம்ருத்ராய நம ஓம் பசுபதே நம ஓம் உக்ராய நம ஓம் மஹாதேவாய நம ஓம் பீமாய நம ஓம்ஈசாய நம” என தினமும் 11 தடவை காலையும் மாலையும் கூறி பூஜை செய்து வந்தால், நாம் எண்ணியதை நம் குலதெய்வம் தருவார்கள்.

    பல குழந்தைகள் நிலநடுக்கத்தில் இறந்திருக்கலாம்.. ஆப்கானிய மருத்துவர்கள் வேதனை..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....