Sunday, March 17, 2024
மேலும்
  Homeசெய்திகள்அரசியல்பொதுக்குழு முடிந்த கையோடு ஓபிஎஸ் ஏன் டெல்லி சென்றார்?

  பொதுக்குழு முடிந்த கையோடு ஓபிஎஸ் ஏன் டெல்லி சென்றார்?

  அதிமுகவில் நடந்து வரும் அசாதாரண சூழல் தான், தமிழகத்தின் தற்போதைய டிரெண்டிங். ஒற்றைத் தலைமை வேண்டி எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரும், அதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பினரும் மோதிக் கொள்கின்றனர். இந்நிலையில், தொண்டர்கள் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது, ஓபிஎஸ் தரப்பை எரிச்சலூட்டச் செய்தது.

  இப்படியான சூழலில், நேற்று திட்டமிட்டபடி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி, ஓ.பிஎஸ் தரப்பு தடை ஆணை பெற்றுள்ளது. எனினும், சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத்தலைமைக்கு ஆதரவாகத் தான் குரல் கொடுக்கப்பட்டது. மேலும், வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் மீண்டும் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்றைய கூட்டத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளிநடப்பு செய்தார்.

  இந்நிலையில், தனது மகன் ரவீந்திரநாத் மற்றும் அதிமுகவில் உள்ள தமது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். இவரது டெல்லி பயணம் எதற்காக என்பது தான் அனைவருடைய கேள்வியாக உள்ளது.

  பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, அதிமுக கட்சியில் நடக்கும் பிரச்சனைகளை கூறி, சமரசம் செய்து வைக்க கோரிக்கை வைப்பார் என ஒரு தரப்பு சொல்கிறது. ஆனால் செய்தியாளர்கள் சந்திப்பில், நாளை தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மூ வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். அந்த நிகழ்வில் பங்கேற்கவே நான் டெல்லி செல்கிறேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

  பொதுக்குழுவில், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செல்லாது என, அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் தெரிவித்தார். வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடக்காது. நாங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வேம்.

  பொதுக்குழு கூட்டம், புரட்சித் தலைவர் மற்றும் புரட்சி தலைவி இருந்த காலத்தில், அவ்வளவு அழகாக இருக்கும். அது மிகவும் கட்டுப்பாடாக இருக்கும். இன்று கட்டுப்பாடு இல்லாமல் காட்டு மிரண்டிதானமாக நடந்து இருக்கிறது. இப்போது நடைபெற்ற பொதுக்குழு கூட்டமே செல்லாது. பேச்சுவார்த்தைக்கு எப்போதுமே ஒருங்கிணைப்பாளர் தயாராக இருக்கிறார். அதிமுக எப்போதும் நன்றாக இருக்க வேண்டும். ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் எனவும் வைத்திலிங்கம் தெரிவித்தார்.

  பாஜக தலைவர்கள்

  பொதுக்குழு கூட்டம் முடிந்த பிறகு, எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் பாஜகவின் தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி நேரில் சந்தித்துப் பேசினார். அவருடன் தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலையும் இருந்தார். இருவரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசிய பின், ஓ.பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பில், அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து தாங்கள் எதுவும் பேசவில்லை என்று அண்ணாமலை கூறினார்.

  இதைத்தொடர்ந்து, பாஜக தலைவர்கள் இருவரும் குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரெளபதி முர்மூவுக்கு, அதிமுகவின் ஆதரவு அளிக்குமாறு, அதன் தலைவர்களிடம் பேச வந்ததாக அதிமுக மற்றும் பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

  குல தெய்வத்தை வீட்டிற்கு அழைப்பது எப்படி?

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....