Friday, March 15, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்ட்விட்டரை வாங்கிய அடுத்த கணமே இந்தியருக்கு ஆப்பு வைத்த எலான் மஸ்க்! முதல் நாளே இப்படியா...

    ட்விட்டரை வாங்கிய அடுத்த கணமே இந்தியருக்கு ஆப்பு வைத்த எலான் மஸ்க்! முதல் நாளே இப்படியா ?

    எலான் மஸ்க் செய்துள்ள சம்பவத்தால் ட்விட்டர் ஊழியர்கள் அதிர்ச்சியையும், அச்சத்தையும் சந்தித்துள்ளனர்.

    டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கடந்த மே மாதம் மிகவும் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ..3.30 லட்சம் கோடி) வாங்குவதற்காக ட்விட்டர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார்.

    அதன்பின்னர், போலி கணக்குகள் மற்றும் ஸ்பேம் (Spam) குறித்த முழுமையான கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார். அதுவரையில் ட்விட்டருடனான தனது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படடுவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். இதன் பின்பு, ட்விட்டர் நிறுவனம் போலி கணக்குகள் குறித்து எந்த விவரங்களையும் தராததால் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் கடந்த ஜூலை 10-ம் தேதி அறிவித்தார். 

    இதையும் படிங்க: விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… டிசம்பரில் ‘தளபதி 67’ – வெளியான லேட்டஸ்ட் அப்டேட்

    இதைத் தொடர்ந்து, எலான் மஸ்க் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கியுள்ளதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது. மேலும், ஒப்பந்தத்தின்படி அவர் நிறுவனத்தை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று ட்விட்டரின் வாரியத் தலைவர் பிரட் டெய்லர் தெரிவித்தார். 

    இதன்பின்னர், ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிவிட்டார் என்று தகவல் வெளிவந்துள்ளது. அதற்கேற்றார் போல், எலான் மஸ்க்கும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் Bio-வில் Chief Twit என்று மாற்றம் செய்துள்ளார். Place என்ற இடத்தில் Twitter HQ எனப் பதிவிட்டு தலைமையகத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

    மேலும், ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவும், இந்தியருமான பராக் அகர்வால், தலைமை நிதித்துறை அதிகாரி நேத் சேகல், சட்டம் மற்றும் திட்டத்துறை தலைமை அதிகாரி விஜயா கட்டே மற்றும் முக்கிய உயர் அதிகாரிகளை பணியில் இருந்தே நீக்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இத்தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ட்விட்டர் ஊழியர்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக எலான் மஸ்க் ட்விட்டரில் பெரும்பாலான ஊழியர்களை நீக்கப்போவதாக தகவல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: வாட்ஸ் ஆப் முடங்கியதற்கான காரணம் என்ன? மத்திய அமைச்சகம் எழுப்பிய கேள்வியால் பரபரப்பான மெட்டா…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....