Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி' ட்விட் போட்ட குஷ்பூவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி எம்பி

    ‘ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி’ ட்விட் போட்ட குஷ்பூவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி எம்பி

    குஷ்புவின் கண்டனத்திற்கு கனிமொழி பதில் அளித்து மன்னிப்பும் கோரியுள்ளார்.

    திமுக நிர்வாகி சைதை சாதிக் மேடையில் பெண்கள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையாகியது. அவர் பேசியதாவது, பாஜகவில் 4 நடிகைகள் இருக்கிறார்கள். குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கௌதமி. நாங்கள் (திமுக) கட்சி வளர்த்தபோது, சீதாபதி, பலராமன், டி.ஆர்.பாலு என தற்போது இளைய அருணா (திமுகவின் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர்) வரை கட்சி வளர்க்கிறார்கள். ஆனால், பாஜகவில் தலைவர்களைப் பார்த்தால் எனக் கூறி சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தினார்.

    இவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, திமுக நிர்வாகியின் பேச்சுக்கு பல தரப்பிலிருந்து கண்டனங்கள் வெளிவந்தன. இவற்றுள் குஷ்பு கண்டனம் தெரிவித்திருந்ததும் அடங்கும். 

    இதையும் படிங்க: விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… டிசம்பரில் ‘தளபதி 67’ – வெளியான லேட்டஸ்ட் அப்டேட்

    குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆண்கள் பெண்களை தவறாக வசைபாடும்போது, அது அந்த ஆண்களின் வளர்ப்பையும், அவர்கள் வளர்ந்த நச்சு சூழலையும் காட்டுகிறது. இந்த ஆண்கள் பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். அத்தகைய ஆண்கள் தாங்கள் கருணாநிதியைப் பின்பற்றுகிறோம் என்று கூறுகிறார்கள். இதுதான் ஸ்டாலினின் திராவிட மாடலா?’ என்று பதிவிட்டிருந்தார். இதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோருக்கு அவர் டேக் செய்திருந்தார். 

    இதைத்தொடர்ந்து, குஷ்புவின் கண்டனத்திற்கு கனிமொழி பதில் அளித்து மன்னிப்பும் கோரியுள்ளார்.

    இதையும் படிங்க: இன்னும் சலிக்காத விக்ரம் திரைப்படம்…கமல்ஹாசன் செய்யப்போகும் அடுத்த பிரம்மாண்டம்?

    கனிமொழி தெரிவித்துள்ளதாவது; 

    ஒரு பெண்ணாகவும், மனுஷியாகவும் நான் அப்படி பேசப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இத்தகைய செயலை யார் செய்திருந்தாலும், அதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. திமுக இதை பொறுத்துக்கொள்ளாது. இந்தச் சம்பவத்திற்கு என்னால் வெளிப்படையாக மன்னிப்புக் கோர முடியும்

    இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார். 

    கனிமொழியின் மன்னிப்பு பதிவுக்கு பதிலளித்துள்ள குஷ்பூ ,அதில் மிக்க நன்றி கனி. உங்கள் நிலைப்பாட்டையும் ஆதரவையும் உண்மையிலேயே பாராட்டுகிறேன். நீங்கள் எப்போதும் பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்காக நிற்கும் ஒருவராக இருந்திருக்கிறீர்கள்.உங்களை பணிகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....