Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இன்னும் சலிக்காத விக்ரம் திரைப்படம்...கமல்ஹாசன் செய்யப்போகும் அடுத்த பிரம்மாண்டம்?

    இன்னும் சலிக்காத விக்ரம் திரைப்படம்…கமல்ஹாசன் செய்யப்போகும் அடுத்த பிரம்மாண்டம்?

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா கொண்டாடப்படவுள்ளது. 

    மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் இணைந்த திரைப்படம்தான், விக்ரம். அனிருத் இசையில், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிக்க விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

    வெறுமனே எதிர்பார்ப்புடன் நில்லாமல், கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி வெளிவந்த விக்ரம் திரைப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் தொடர்ந்து பல சாதனைகளை இத்திரைப்படம் நிகழ்த்தியது. 

    இந்நிலையில், விக்ரம் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி விழாவை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் வெகுவிமரிசையாக கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, விக்ரம் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா நவம்பர் 7-ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.

    இந்த விழாவை விக்ரம் படத்தின் தயாரிப்பாளர்களான கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தவுள்ளனர். விக்ரம் படத்தில் பங்களிப்பாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் உள்பட அனைவரும் இவ்விழாவில் கௌரவிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்கநாளை மறுநாள் தொடங்கும் வடகிழக்கு பருவமழை: படிப்படியாக அதிகரிக்கும் என தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....