Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகோயில்களில் உள் பிரகாரத்தில் யாகங்கள் நடத்த அனுமதிக்கக்கூடாது; உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    கோயில்களில் உள் பிரகாரத்தில் யாகங்கள் நடத்த அனுமதிக்கக்கூடாது; உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    தமிழக கோயில்களில் உள் பிரகாரத்தில் யாகங்கள் நடத்த அனுமதிக்கக்கூடாது என மதுரை உச்சநீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. 

    தூத்துக்குடி மாவட்ட பாஜக செயலாளர் சித்ரங்கநாதன், மதுரை உச்சநீதிமன்ற தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:

    திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25 ஆம் தேதி தொடங்கி வரும் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இறுதி நாளில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும். 

    திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் இருப்பது வழக்கம். ஆனால், இந்த வருடம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் இருக்க அனுமதி அளிக்கவில்லை. அதனால், திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள் பிரகாரத்தில் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும்.

    இதையும் படிங்க: இந்திய அரசு கண்டிக்காதது தான் சிங்கள அரசின் அத்துமீறலுக்கு காரணம்; பாமக தலைவர் கண்டனம்

    இவ்வாறு, அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

    திருச்செந்தூர், பழனி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் கோயில் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் திருப்பதி கோயிலில் உள்ளது போன்ற கட்டுபாடுகளைக் கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் கோவில் வளாகத்திற்குள் யாகம் நடத்த அனுமதி அளிக்கக் கூடாது. யாகங்கள் கோயிலின் வெளியே நடைபெற வேண்டும். தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஒரே மாதிரியான நடைமுறைகளை, கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

    மேலும், இந்த மனு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, மனு தொடர்பான அடுத்த விசாரணை நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....