Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் தமிழக அரசுக்கு எவ்வளவு வருவாய் தெரியுமா?

    தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் தமிழக அரசுக்கு எவ்வளவு வருவாய் தெரியுமா?

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இயக்கப்பட்ட தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் 9.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டதாக தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. 

    தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் தீபாவளிக்கு எப்போதும் இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதல் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்நிலையில், தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் 9.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டதாக தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. 

    இது தொடர்பாக தமிழக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் கடந்த நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 

    சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் தமிழக அரசுக்கு 9.5 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 16,888 சிறப்பு பேருந்துகள் மூலம் சுமார் 2.8 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். 

    தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லா மாநகரப் பேருந்துகளில் கடந்த செப்டம்பர் மாதம் வரை 173 கோடி முறை பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளனர். 

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ‘இதுதான் குடும்ப படமோ’ – டிரெண்டாகும் வாரிசு படக்குழுவின் ‘போஸ்ட்’…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....