Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇளைஞர்களை ஈர்க்கும் ஃபயர்கட்டிங்..! விபரீதத்தில் முடிந்த பரிதாப நிகழ்வு...

    இளைஞர்களை ஈர்க்கும் ஃபயர்கட்டிங்..! விபரீதத்தில் முடிந்த பரிதாப நிகழ்வு…

    குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு சலூன் கடையில் ஃபயர் கட்டிங் செய்த 18 வயதுடைய இளைஞரின் தலையில் திடீரென தீப்பற்றி படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    கடந்த சில ஆண்டுகளாகவே இளைய தலைமுறையினரிடம் ஃபயர் கட்டிங் அதிக பிரபலமடைந்து வருகிறது. இந்த முறையின் காரணமாக முடி வெட்டுகையில், அவற்றை ஒரே சீராக்க தீ பற்ற வைக்கப்படுவது வழக்கம். இதனை சிலர் ஸ்டைலாக நினைத்து புள்ளிங்கோ போல் ஃபயர் கட்டிங் செய்து கொள்கின்றனர். 

    இந்நிலையில், நேற்று குஜராத் வல்சாத் மாவட்டத்தில் உள்ள வாபி நகரத்தில் இளைஞரின் தலையில் நெருப்பை பற்ற வைத்தபோது, அது விபரீத முடிவாக அமைந்தது. ஃபயர் கட்டிங் காரணமாக, அந்த இளைஞருக்கு கழுத்து மற்றும் மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

    இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது:

    பாதிக்கப்பட்டவர் மற்றும் முடிதிருத்தும் நபரின் வாக்குமூலத்தை பெற முயற்சித்து வருகிறோம். அவர் வல்சாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து சூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

    முதற்கட்ட விசாரணையில், ஃபயர் கட்டிங் செய்வதற்காக, வந்த இளைஞரின் தலையில் தீப்பற்ற பயன்படுத்தப்படும் ரசாயனத்தை அடித்த போது, எதிர்பாராதவிதமாக தீ பரவி, அவரது உடலின் மேல்பகுதி முழுவதும் எரிந்துள்ளது. முடிதிருத்தும் நபர், எந்த ரசாயனத்தை பயன்படுத்தினார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: இந்திய அரசு கண்டிக்காதது தான் சிங்கள அரசின் அத்துமீறலுக்கு காரணம்; பாமக தலைவர் கண்டனம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....