Friday, March 15, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்பேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களை பதம் பார்த்த காலாண்டு முடிவு! அதிர்ச்சியில் ஊழியர்கள்

    பேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களை பதம் பார்த்த காலாண்டு முடிவு! அதிர்ச்சியில் ஊழியர்கள்

    கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை காலாண்டில் வருவாயும் லாபமும் சரிவை சந்தித்திருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    அமெரிக்காவில் நிதியாண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை கணக்கிடப்படுகிறது. இதன் அடிப்படையில் ஜூலை முதல் செப்டம்பர்  மாதம் வரையிலான மூன்றாவது காலாண்டு நிதிநிலை அறிக்கையை முகநூல் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

    இதன்படி, மூன்றாவது காலாண்டில் மெட்டா நிறுவனம் 440 கோடி டாலர் அல்லது ஒரு பங்குக்கு 164 டாலர் லாபத்தை எடுத்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடும்போது 52 சதவீதம் குறைவு ஆகும். கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்த நிறுவனம் 919 கோடி டாலர் அல்லது ஒரு பங்குக்கு 322 டாலர் லாபத்தை ஈட்டியுள்ளது. 

    நடப்பு நிதியாண்டில் மூன்றாவது காலாண்டில் மெட்டா நிறுவனத்தின் மொத்த வருவாய் 4 சதவீதம் சரிந்து, 2,771 கோடி டாலராக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் மொத்த வருவாய் 2,901 கோடி டாலராக இருந்த நிலையில், மெட்டா நிறுவனத்தின் வருவாய் தொடர்ந்து 2-வது காலண்டாக சரிந்துள்ளது. 

    இதையும் படிங்க: ட்விட்டரை வாங்கிய அடுத்த கணமே இந்தியருக்கு ஆப்பு வைத்த எலான் மஸ்க்! முதல் நாளே இப்படியா ?

    இதைத்தொடர்ந்து, அமெரிக்க பங்குச் சந்தையில் மெட்டா நிறுவனத்தின் பங்குகள் 14 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன. 

    விளம்பர வருவாய் குறைந்தது மற்றும் டிக்டாக் செயலியின் போட்டி ஆகிய காரணங்களினால் மெட்டா நிறுவனத்தின் வருவாய் சரிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

    சத்ய நாடெல்லா தலைமை வகிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட செப்டம்பர் காலாண்டு முடிவில் 50.12 பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டியுள்ளது. 

    வருமான அளவில் சந்தை கணிப்புகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் உடைத்தாலும் லாப அளவுகளில் 14 சதவீத சரிவைப் பதிவு செய்து 17.56 பில்லியன் டாலர் வருவாயைப் பெற்றுள்ளது.

    அதேபோல் சுந்தர் பிச்சை தலைமை வகிக்கும் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் செப்டம்பர் காலாண்டில் லாபமாக 13.9 பில்லியன் டாலரை ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 27 சதவிகிதம் அளவிற்கு குறைந்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....