Monday, March 18, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புஇந்த மாதிரி மிகவும் சுவையான இரவு உணவை செய்து இருக்கீங்களா?

    இந்த மாதிரி மிகவும் சுவையான இரவு உணவை செய்து இருக்கீங்களா?

    எப்போதும் இட்லி, தோசை, உப்புமா என்று இரவு நேர உணவுகள் வீட்டில் எல்லாருக்கும் பழகி இருக்கும். இப்படி ஒரு இரவு உணவை செய்து கொடுத்துப் பாருங்கள் விரும்பி உண்ணுவார்கள். 

    தேவையான பொருள்கள்:

    • வெங்காயம்- இரண்டு 
    • தக்காளி- இரண்டு 
    • பச்சமிளகாய்- இரண்டு 
    • கோதுமை மாவு- ஒரு கப் 
    • மைதா மாவு- கால் கப் 
    • கடலை மாவு- அரைக் கப் 
    • கொத்தமல்லி தழை- ஒரு கொத்து 
    • சீரகத் தூள்- கால் தேக்கரண்டி 
    • சிவப்பு மிளகாய்த் தூள்- கால் தேக்கரண்டி 
    • உப்பு, எண்ணெய், தண்ணீர் தேவையான அளவு 

    செய்முறை:

    • ஒரு பாத்திரத்தில் பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி கொத்தமல்லித் தழை, சிவப்பு மிளகாய்த்தூள், பச்சை மிளகாய், சீரகத்தூள், உப்பு சேர்த்து கலந்து விட்டுக் கொள்ள வேண்டும்.
    • பின்பு சுத்தமான கடலை மாவை அதனுடன் சேர்த்து விருப்பப்பட்டால் சிறிது மிளகுத்தூளை அதில் சேர்த்துக் கொள்ளலாம்.
    • மேலும் அதில் தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து கலந்துக் கொண்டே வர வேண்டும். பின்பு ஒரு பசைப் போன்ற அளவிற்கு வந்தவுடன் கலப்பதை நிறுத்திவிட வேண்டும். மாவுப் பதம் தண்ணீராகவும் இருக்க கூடாது கெட்டியாகவும் இருக்க கூடாது. 
    • அடுத்து சப்பாத்திக்கு மாவு பிசைவதுப் போல் பிசைந்து எத்தனை உருண்டைகள் தேவையோ அப்படி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். கோதுமை மாவும் சிறிது மைதா மாவும் கலந்த சப்பாத்தி மாவு பிசைந்தால்  ரொட்டி நன்றாக இருக்கும். 
    • ரொட்டிக்கு தேய்ப்பது போல் தேய்த்து அதில் நாம் முன்னரே செய்து வைத்த அந்த பசைபோன்ற கடலை மாவும் காய்களும் கலந்த கலவையை  இதில் முழுவதுமாக தடவி உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். 
    • இட்லி தட்டில் உருட்டிய ரொட்டிகளை வைத்து இட்லி பாத்திரத்தில் சிறிது நீர் வைத்து வேக வைக்க வேண்டும். பத்து முதல் 15 நிமிடங்கள் வரை நன்றாக வேக வைக்க வேண்டும். 
    • பிறகு வேக வைத்த ரொட்டிகளை எடுத்து வட்ட வட்டமாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். 
    • அடுத்து ஒரு தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி, வெட்டிய ரொட்டித் துண்டுகளை அதில் வைத்து இரண்டு புறமும் பொன்னிறம் ஆகும் வரை திருப்பி போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். 
    • அவ்வளவு தான் பொன்னிறம் ஆன துண்டுகள் சாப்பிடத்  தயார். இப்படி செய்துக் கொடுத்துப் பாருங்கள் பிள்ளைகள் விரும்பி உண்ணுவார்கள்.

    சில்லி இட்லி எப்படி செய்யணும் தெரியுமா? இது போல செஞ்சி பாருங்க பசங்க விரும்பி சாப்பிடுவாங்க!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....