Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்திய-சீன எல்லையில் பதற்றம் : சீன அமைச்சர் இந்தியாவுக்கு திடீர் வருகை!

    இந்திய-சீன எல்லையில் பதற்றம் : சீன அமைச்சர் இந்தியாவுக்கு திடீர் வருகை!

    இந்திய சீன எல்லையில் கடந்த சில மாதங்களாகவே பதற்ற நிலை உருவாகி வரும் நிலையில் இந்திய எல்லையில் உள்ள சீனப் படைகளை திரும்பப்பெறக் கோரி சீன வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். 

    இந்திய எல்லையில் இருக்கிறது லடாக் யூனியன் பிரதேசம். இதன் எல்லைப்பகுதியை அடுத்து சீன எல்லைப்பகுதி அமைந்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு அங்கு பதற்ற நிலை உருவாகியது. கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் இருநாட்டு ஒப்பந்தங்களை மீறி சீன ராணுவ வீரர்கள் ஊடுருவத் தொடங்கினர். 

    கடந்த மே மாதம் 5ஆம் தேதி பாங்காங் ஏரி பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்றது. பின்பு சிறிது காலம் அமைதி நிலவிய நிலையில் கடந்த 2020ல் ஜூன் 15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு வீரர்களுக்கும் இடையே கடும்மோதல் வெடித்தது. 

    அப்பொழுது நடந்த பெரும் சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது. சீனா அதனுடைய தரப்பில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் இறந்ததாகக் கூறியது. இதனால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் ஏற்படும் அபாயம் நிலவியது. இரு நாடுகளும் தங்களது எல்லைப்பகுதியில் லட்சக்கணக்கில் போர்வீரர்களைக் குவித்து வந்தன. 

    இந்தியாவில் இருந்து மேலதிகாரிகள் எல்லையில் பதற்றத்தைக் குறைத்து இரு நாடுகளுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த மேல்மட்ட பேச்சவார்த்தைக்குச் சென்றனர். இதுவரை 15 கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இதன் விளைவாக இரு நாடுகளும் எல்லைப்பகுதியில் இருந்து தங்களது படைகளை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றின. 

    தற்பொழுது அங்கு இருதரப்பிலும் சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவில் உள்ள ஷாங்காய் மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்கி யீ-இடம் இதைப் பற்றி பேசியிருந்தார். 

    சில தினங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு பயணம் மேற்கொண்டிருந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, திடீர் பயணமாக இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்பொழுது, அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து சுமார் மூன்று மணிநேரங்கள் உரையாடினார். 

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், இந்த சந்திப்பில் இருநாட்டுக்கும் இடையில் சுமூக உறவு இல்லை என்றும், மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமெனில் எல்லைகளில் இருந்து படைகளைத் திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைத்ததாகக் கூறினார்.  

    மேலும், ஆப்கானிஸ்தான் மற்றும் உக்ரைன் போன்ற சர்வதேச பிரச்சினைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....