Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்புதினின் காதலியை நாட்டைவிட்டு வெளியேற்றக்கோரி கோரி மனு : ரஷ்ய, பெலாரஸ் மற்றும் உக்ரைன் மக்கள்...

    புதினின் காதலியை நாட்டைவிட்டு வெளியேற்றக்கோரி கோரி மனு : ரஷ்ய, பெலாரஸ் மற்றும் உக்ரைன் மக்கள் அதிரடி

    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் காதலி என்று கூறப்படும் அலினா கபேவா ரஷ்யாவின் முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையை, சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று மக்கள் இணையதளத்தில் மனு கொடுத்துள்ளனர். 

    உக்ரைன்- ரஷ்யா போரானது பதற்ற நிலையை எட்டியுள்ள நிலையில் change.org என்ற இணையத்தளத்தில் ஒரு மனு பதிவிடப்பட்டுள்ளது. அதில் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதினின் காதலி என்று ரஷ்யாவின் முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையைக் குறிப்பிட்டுள்ள அவர்கள், அவர் தன்னுடைய 3 குழந்தைகளுடன் சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு சொகுசு மாளிகையில் வசித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தங்களை துன்பத்துக்குள்ளாகிய புதினின் மனைவியை வெளியேற வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். இதனைப் பதிவிட்டவர்கள் ரஷ்யா, பெலாரஸ் மற்றும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

    இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள ரஷ்யாவின் முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை, ஆசியாவின் நெகிழ்வான பெண் என்று அழைக்கப்படக்கூடிய அலினா கபேவா ஆவார். 38 வயதாகும் இவர் 6 ஆண்டுகள் புதின் நடத்தி வரும் ஐக்கிய ரஷ்யா கட்சியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 

    முக்கிய பத்திரிக்கைகள் பல இவரை புதின் காதலி என்று கருத்து கூறி வந்தன. ஆனால், புதினோ அல்லது அலினா கபேவாவோ இது குறித்து பொதுவெளியில் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. 

    இந்நிலையில் இந்த மனுவானது 70,000 ஓட்டுகளுக்கும் மேல் பெற்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 75,000 ஓட்டுகள் பெற்றால் இது ஒரு அங்கீகரிக்கப்பட்ட மனுவாக ஏற்றுக்கொள்ளப்படும். அதற்கு இன்னும் 5,000 ஓட்டுக்களே தேவை. 

    இந்த மனுவில் இது அலினா கபேவாவை அவரின் தலைவரோடு இணைக்க வேண்டிய தருணம் என்று ஜெர்மன் மொழியில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், போர் உச்சம் பெற்றுள்ள நிலையில் சுவிட்சர்லாந்து தொடர்ந்து இது போன்று ரஷ்யாவுக்கு ஆதரவான செயல்களைச் செய்து வருகிறது என சுவிட்சர்லாந்து மீதும் குற்றம் சாட்டியுள்ளனர். 

    இந்த மனுவானது ஜெர்மன்,பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் உக்ரைன் போரினால் அலினா கபேவா சுவிட்சர்லாந்துக்கு அனுப்பட்டுள்ளார் என்ற குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த மனுவானது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

    அலினா கபேவா கிரெம்ளின் சார்பு ஊடக குழுவான நேஷனல் மீடியா குழுவின் இயக்குநர்கள் குழுவின் தலைவராக ஏழு ஆண்டுகள் பணியாற்றி வந்தார். இதற்கு சம்பளமாக 8 மில்லியன் பவுண்டுகள் பெற்று வந்தார் என்று கூறப்படுகிறது.அலினா கபேவா பெரும்பாலும் பொதுவெளியில் தோன்றுவதில்லை. கடைசியாக கடந்த ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற டிவைன் கிரேஸ் ரிதமிக் ஜிம்னாஸ்டிக் போட்டியில் நடனமாடினார். 

    ரஷ்யாவினால் ஏற்பட்ட துன்பத்தால் மக்கள் ஒன்றிணைந்து சுவிட்சர்லாந்துக்கு எதிராக குறிப்பிட்டுள்ள மனுதாரர்கள், வரலாற்றில் முதல் முறையாக சுவிட்சர்லாந்து நடுநிலைமைத் தன்மையை மீறியுள்ளதாகக் கூறியுள்ளார்.    

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....