Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வெளிவந்த பீஸ்ட் திரைப்பட அறிவிப்பு; ஏமாற்றத்தில் விஜய் ரசிகர்கள்!

    வெளிவந்த பீஸ்ட் திரைப்பட அறிவிப்பு; ஏமாற்றத்தில் விஜய் ரசிகர்கள்!

    தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் இதற்கு முன்னமே வெளிவந்த வேட்டைக்காரன், சுறா, சர்கார் போன்ற திரைப்படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், நான்காவது முறையாக விஜய்யுடன் கைக்கோர்த்துள்ள திரைப்படம் தான் பீஸ்ட்.

    தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

    பீஸ்ட் திரைப்படமானது வருகிற ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பல திரையரங்குகளும் பீஸ்ட் திரைப்படத்தை வாங்க முன்வந்துக் கொண்டிருக்கின்றனர். 

    இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தைப் பற்றிய மற்றொரு அறிவிப்பு ஒன்று வெளிவந்து இந்தியா முழுவதும் உள்ள விஜய் பிரியர்களை குதூகலப்படுத்தியுள்ளது. ஆம்! பீஸ்ட் திரைப்படமானது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பீஸ்ட் திரைப்படமானது வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை படக்குழுவானது பீஸ்ட் திரைப்படத்தின் புது புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது.

    விஜய் அவர்களுக்கு தமிழகத்தில் மட்டும் அல்லாது பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் இருப்பது அறிந்த ஒன்றுதான். அதனாலும், தமிழ் திரைப்படங்களுக்கு பிற மாநிலங்களிலும் ஒரளவு வரவேற்பு இருக்கிறது என்பதினாலும் தயாரிப்பு நிறுவனம் இம்முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது. 

    பீஸ்ட் திரைப்படத்தில் இருந்து அனிருத் இசையில் வெளிவந்த அரபிக்குத்து பாடலுக்கும், ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இன்னமும் கூட இரு பாடல்களும் யூடியூப் தளத்தில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றன. ஆனால் இதற்கு பிறகு பீஸ்ட் திரைப்படத்தில் இருந்து மக்களை ஆர்பரிக்கும் விடயங்கள் எதுவும் அவ்வளவாக வெளிவரவில்லை.

    பீஸ்ட் திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா இல்லை என்ற தகவல் ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. இச்செயலே பல விஜய் ரசிகர்களை ஏமாற்றியது. இந்நிலையில் திரைப்படம் வெளியாக இருபது நாட்களுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் பீஸ்ட் திரைப்படத்திற்கான புரோமஷன் பணிகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடங்கியபடியே தெரியவில்லை.

    புரோமஷன்களில் ஜித்து என்று புகழப்பட்டு வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பீஸ்ட் திரைப்படத்திற்கு எந்த புரோமஷன் பணிகளையும் மேற்கொள்ளாதது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்து வருகிறது. ரசிகர்கள் தங்களின் ஏமாற்றங்களை சமூக வலைத்தளத்தில் கூறி வருகின்றனர். 

    இப்படியான சூழலில்தான், பீஸ்ட் திரைப்படத்தின் டீசர் வருகிற ஏப்ரல் ஒன்றாம் தேதி வெளியாகும் என்றும், டீசர் வெளியானப் பின்னே படத்தின் புரோமஷன் பணிகள் ஆரம்பமாகும் என்றும் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. 

    பீஸ்ட் திரைப்படத்தின் புரோமஷன் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு வியாபாரங்கள் முறையாக நடந்தால், தளபதி விஜய் திரைப்படம் இயல்பாக செய்யும் மெகா வசூல் சாதனைகளை பீஸ்ட் முறியடிக்கும் என்று தென்னிந்திய திரைப்பட விநியோகஸ்தர்கள் பலரால் கூறப்பட்டு வருகிறது. 

    இதையும் படிங்க ; தளபதி விஜயின் துள்ளல் குரலில் “ஜாலியோ ஜிம்கானா” எப்படி இருக்கு?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....