Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஎலக்ட்ரானிக் பைக்கால் ஏற்பட்ட விபரீதம்; தந்தை மகள் உயிரிழப்பு!

    எலக்ட்ரானிக் பைக்கால் ஏற்பட்ட விபரீதம்; தந்தை மகள் உயிரிழப்பு!

    எலக்ட்ரானிக் பைக் வெடித்து வீட்டில் இருந்த தந்தை மற்றும் மகள் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    வேலூரில் சின்ன அல்லாபுரம் பலராமன் பகுதியைச் சேர்ந்தவர் கேபிள் டிவி ஆபரேட்டர் ஆன துரைவர்மன் வயது 49 இவரது மகள் ப்ரீத்தி வயது 13. ப்ரீத்தி போளூர் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறாள். மேலும் துரைவர்மன் மனைவி சில வருடத்துக்கு முன் இறந்துள்ளார்.  

    துறை வர்மனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் என்பதால் ப்ரீத்தி  தனது பாட்டி வீடான போளூரில் தங்கி இருக்கிறார். இந்நிலையில் நேற்று தந்தை வீடான வேலூருக்கு வந்திருக்கிறார். துறைவர்மன் எலக்ட்ரானிக் பைக்கையும் பெட்ரோலில் இயங்கும் பைக்கையும் வாங்கி வைத்து பயன்படுத்தி வந்திருக்கிறார். இதையடுத்து நேற்று வெளியில் சென்று வீடு திரும்பியதும் இரவு நேரத்தில் எலக்ட்ரானிக் பைக்குக்கு சார்ஜ் செய்துவிட்டு தூங்க சென்றுள்ளனர். 

    நள்ளிரவில் பைக் திடீரென வெடித்திருக்கிறது. இதனால் கரும்புகை உருவாகி இருக்கிறது. வீடு முழுவதும் புகை வேகமாக பரவி உள்ளது. மேலும் துரைவர்மனின் வீடு மிகக் குறுகலாக இருந்ததால் கரும் புகை நச்சு வாய்ந்த புகையாக மாறியிருக்கிறது. இதையடுத்து துரைவர்மன் வீட்டில் இருந்து ப்ரீத்தியை கூட்டிக் கொண்டு வெளியே செல்ல முயிற்சித்திருக்கிறார். தீயும் கரும் புகையின் காரணமாக வெளியே செல்ல முடியாததால் மூச்சு திணறல் காரணமாக அவரும் அவரின் மகளும் கழிவறையின் உள் சென்று பூட்டிக் கொண்டுள்ளனர். இருந்தும் நச்சு புகை அந்த அறையிலும் பரவியதால் மயங்கி இறந்துள்ளனர். 

    கரும் புகை வெளியேறியதை அடுத்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது உள்ளே சென்று பார்த்த போது தான் தெரிந்திருக்கிறது தந்தையும் மகளும் உயிரிழந்தனர் என்று. 

    மேலும் காவல் துறை வழக்கு பதிவு செய்து எலக்ட்ரானிக் பைக் ஆல் ஏற்பட்ட விபத்திற்கான காரணங்களை ஆராய்ந்து வருகிறது. எலக்ட்ரானிக் பைக் தீ பிடித்து எரிந்ததால் ஏற்பட்ட நச்சுப் புகையின் காரணமாக இறந்திருக்கலாம் என்று கருத்தப்படுகிறது. அதிக நேரம் எலக்ட்ரானிக் பைக் சார்ஜில் இருந்தபடியால் இப்படி வெடித்திருக்கலாம் எனத் தெரிகிறது என காவல் துறை தெரிவித்துள்ளது. 

    நிபுணர்கள் தெரிவித்த கருத்தில் அதிக நேரம் பைக் வெளியில் நின்று பின்பு உடனே சார்ஜ் செய்திருப்பதால் சூடாகி வெடித்திருக்கலாம் எனவும் இது போன்ற விபத்துக்கு காரணமாக பொருள் உற்பத்தியில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் உண்டு எனவும் மேலும் இது மாதிரியான விபத்துக்களைத் தவிர்க்க பொருளுடன் கொடுக்கப்படும் கையேடுகளின்படி பயன்படுத்தினால் பாதுகாப்பானது எனவும் தெரிவித்தனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....