Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புசில்லி இட்லி எப்படி செய்யணும் தெரியுமா? இது போல செஞ்சி பாருங்க பசங்க விரும்பி சாப்பிடுவாங்க!

    சில்லி இட்லி எப்படி செய்யணும் தெரியுமா? இது போல செஞ்சி பாருங்க பசங்க விரும்பி சாப்பிடுவாங்க!

    இட்லி உப்புமா செய்து கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள் இப்படி புதுவிதமாக செய்து கொடுத்துப் பாருங்கள். அள்ளிப் போட்டு சாப்பிடுவார்கள். இப்படி செய்து பாருங்கள். 

    தேவையான பொருள்கள்:

    • இட்லி – ஐந்து 
    • காய்ந்தமிளகாய் – ஒரு கைப்பிடி 
    • வெங்காயம் – இரண்டு 
    • பூண்டு – 7 பற்கள் 
    • மைதா மாவு – இரண்டு மேசைக்கரண்டி 
    • தக்காளி கிச்சப் – இரண்டு தேக்கரண்டி 
    • குடைமிளகாய் – ஒன்று
    • வினிகர்- ஒரு மேசைக்கரண்டி 
    • கொத்தமல்லி – ஒரு கொத்து 
    • உப்பு எண்ணெய் தண்ணீர் தேவையான அளவு 

    செய்முறை:

    • ஒரு பாத்திரத்தில் ஒரு சோம்பு தண்ணீர் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொத்து வந்ததும் அதில் மிளகாய் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து 10 முதல் 12 நிமிடங்கள் வரை வேக வைக்க்க வேண்டும் பின்பு அதில் ஒரு ஒரு மேசைக்கரண்டி வினிகர் சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும். சில நிமிடங்கள் கழித்து இறக்கி வைத்து ஆறியவுடன் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். (இந்த மிளாகாய் விழுதை நீங்கள் மூன்று மாதங்கள் வரை சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம்) 
    • அரைத்து வைத்த மிளகாய் விழுதை, கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அதில் சேர்த்து நன்றாக கிளறி விட்ட படியே இருக்க வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து அதை இறக்கி வைத்து விடலாம். 
    • பின்பு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, நன்றாக பொடிப் பொடியாக நறுக்கிய பூண்டினை அதில் சேர்த்து வதக்க வேண்டும். பின்பு அதில் பெரிது பெரிதாக நறுக்கிய வெங்காயம், குடைமிளாகாய், சிறிது உப்பு, வேண்டுமென்றால் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். 
    • வெங்காயம், குடைமிளகாய் நன்றாக வதங்கியவுடன் அதில் நாம் அரைத்து வைத்த ஒரு தேக்கரண்டி மிளகாய் விழுதைச் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். பின்பு அதில் தக்காளி கிச்சப் இரண்டு தேக்கரண்டி சேர்த்து நன்றாக கிளறி விட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். (தக்காளி கிச்சப் இல்லை என்றால் ஒரு பழுத்த தக்காளியுடன் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து அரைத்து பயன்படுத்தலாம்) 
    • ஒரு கொதி வந்ததும் அதில், தண்ணீர் விட்டு கலக்கிய மைதா மாவைச் சேர்த்து கிளறி விட வேண்டும். பின்பு உடனே கட்டம் கட்டமாக வெட்டிய இட்லி துண்டுகளை அதில் சேர்க்க வேண்டும். நன்றாக கிளறி விட்டு இரண்டு நிமிடத்தில் மல்லித் தழை தூவி இறக்கினால் சூடான சுவையான சில்லி இட்லி தயார். 
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....