Saturday, March 16, 2024
மேலும்
    Homeவாழ்வியல்மனிதர்கள் ஏன் சிரிக்கிறார்கள் தெரியுமா?

    மனிதர்கள் ஏன் சிரிக்கிறார்கள் தெரியுமா?

    “வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்”-னு ஒரு பழமொழி இருக்கு. சிரிப்பு என்பது மனுஷங்களுக்கே உரிய அறிய பொக்கிஷயம். மனுஷங்களோட ஒரு சமுக உணர்வுனா அது சிரிப்பு தான்…அகத்தின் அழகு முகத்தில் தெரியும்-னு சொல்லுறது போல மனுஷனோட மன நிம்மதி சந்தோசம் எல்லாமே நம்மளோட சிரிப்புல தெரியும்.

    இப்படி மனுஷங்களுக்கு அழகு சேக்குற சிரிப்புக்கு பின்னாடி இருக்குற அறிவியலையும் …நாம ஏன் சிரிக்கிறோம் ? எதுக்காக சிரிக்குறோம்? -னு பல ஆராய்ச்சியாளர்கள் சொன்ன சுவாரசியமான தகவலையும் இந்த தொகுப்புல பாக்கலாம் வாங்க.

    மனுஷங்களாகிய நாம தனியா இருப்பத விட மற்றவர்களோடு இருக்கும்போது தான் முப்பது மடங்கு அதிகமா சிரிப்போம். அதுலயும் நாம நமக்கு பிடித்த மனிதர்களோடு இருக்கும் போது அதிகமாக சிரிக்கிறோம்.

    இதுகுறித்து, நரம்பியல் நிபுணரும் ஸ்டாண்ட்-ஆப் காமெடியனுமான சோஃபி ஸ்காட், பல்வேறு காரணங்கள விவரிக்கிராங்க.

    “நாம மற்றவர்கள் கூறுவதை ஆமோதிக்கும் போது, சிரிப்போம். இதற்கு காரணம், அவங்க கூறும் விஷயத்த நாமும் நினைவுப்படுத்தி கொள்வோம். மனுஷங்க பொதுவா மற்ற உணர்வுகள மறைப்பதற்கும் சிரிப்பைப் பயன்படுத்துவாங்க.

    மனுஷங்களாகிய நாம நம்மளோட கவலையையோ, வலியையோ மறைப்பதற்கு சிரிப்ப பயன்படுத்துவோம்.

    மனுஷங்க பொதுவா ஒருத்தர அவங்க நினைத்த வேலைகள செய்யவைக்கவும், அவர்கள முதலில் சிரிக்க வைக்க முயற்சி செய்வாங்க.

    நீங்க ஒருத்தர சிரிக்க வச்சா.. அவங்க அவங்களோட ரகசியங்களை உங்ககிட்ட பகிர்ந்துக்க அதிகமாவே வாய்ப்பு இருக்கு.

    சிரிப்புல இரண்டு வகை இருக்கு. ஒன்று, தன்னிச்சையாக வரும் சிரிப்பு. இந்த சிரிப்ப உங்களால கட்டுப்படுத்த முடியாது.

    மனிதர்கள் ஏன் சிரிக்கிறார்கள்? - அறிவியல் கூறும் காரணங்கள் - BBC News தமிழ்

    மற்றொரு வகை, இருவர் பேசிக்கொண்டிருக்கையில் ஏற்படுற சிரிப்பு. உதாரணமாக, இருவர் ஒரு குறிப்பிட்ட விஷயத்த பத்தி பேசிக்கொண்டிருக்கும்போது ஏற்படும் சிரிப்பு. இது சிறிது நேரமே இருக்கும்” என்கிறார் நிபுணர் சோஃபி.

    சிரிப்பு என்பது ஒருத்தர் கிட்ட இருந்து மற்றவருக்கு பரவக்கூடிய ஒரு உணர்வுனு அறிவியல்-ல நிரூபிச்சிருக்காங்க.

    பல சமயம் ஒருவர் சிரிக்கும்போது, அவர்கள் அருகில் இருப்பவர்களும் சிரிக்க நிறைய வாய்ப்புண்டு. இத அறிவியல்-ல “இயல்புடன் தொடர்புடைய பரவும் தன்மை அதாவது behaviorally contagious phenomena என்று அழைக்கப்படுது.

    இது எப்படின்னா… ஒருத்தர் கொட்டாவி விட்டா அத பார்க்கிற நமக்கும் கொட்டாவி வருவது இயல்பு. இது போல தான் சிரிப்பும், நமக்கு அருகாமைல யாராவது சிரித்த பல சமயங்கள்-ல நாமமும் சிரிக்க காரணமும் இது தான்.

    இதையும் படிங்க: திரையரங்கில் அமர்ந்து யாரும் படம் பார்க்க போவதில்லை…வாரிசு படம் குறித்து டான்ஸ் மாஸ்டர் ஜானி வெளியிட்ட பரபரப்பு ட்விட் !

    எல்லாம் சரி… முதல் முதல்-ல மனிதன் எப்படி சிரிக்க காத்துக்கிட்டானு தெரியுமா ?

    பிறந்த எந்த குழந்தையும் முதலில் தன் பெற்றோரைப் பார்க்கும்போது சிரிக்காது. ஆனா, பெற்றோர்கள் குழந்தைகளை சிரிக்க வைக்க முயற்சி செய்வாங்க. பெற்றோர்கள் சிரிப்பதை பார்க்கும் குழந்தைகள் சிரிக்க தெரிந்துக்கொள்ளும். மேலும், நாம ஒன்றாக சிரிக்கும் இயல்பையும் குழந்தைகளுக்கு கற்றுகொடுக்கிறோம்.

    அன்புக்கு காரணம் சொல்லும் அறிவியல்: மனிதர்கள் ஏன் முத்தமிடுகின்றனர்? - BBC News தமிழ்

    பொதுவா சிரிப்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமான ஒரு உணர்வு-னு நாம் நினைத்துக்கொள்கிறோம். ஆனால், அது மனிதர்களுக்கு மட்டும் உள்ள உணர்வு அல்ல -னு சொல்கிறார் நிபுணர் சோஃபி ஸ்காட்.

    குரங்குகளின் இனம் அனைத்தும் சிரிக்கும் உணர்வை கொண்டது தான்.

    கொரில்லா சிரிக்கும்; சிம்பான்சி சிரிக்கும்; ஒராங்குட்டான் சிரிக்கும் – இவையனைத்தும் மனிதர்களைப் போலவே சிரிக்கும். அவையும் விளையாட்டுத்தனமாக சிரித்து மகிழும். இது மாதிரியான சிரிப்பை நாம எலிகள் மற்றும் கிளிகள் கிட்ட பாக்க முடியும்.

    மனுஷனோட சிரிப்பு சில சமயங்கள்-ல அவனுக்கே எமனா மாற கூட வாய்ப்பு இருக்குனு சொல்றாங்க நிபுணர் சோஃபி.

    “நீங்கள் தொடர்ந்து மிகவும் அதிகமாக சிரிக்கும்போது, அதாவது உங்களோட விலா எலும்பு வர இழுத்து சிரிக்கும்போது, அது உங்களோட இதயத்திற்கும், நுரையீரலுக்கும் அழுத்ததை ஏற்படுத்தும்.

    உங்களுக்கு இதயம், நுரையீரல், ரத்த நாளங்கள்-ல ஏதாவது நோய் இருந்தால், இதுபோன்ற தருணங்கள்-ல மேலும் அழுத்தம் ஏற்படும். வரலாற்று பக்கங்கள பார்க்கும்போது, சிரிப்பால் இறந்தவர்கள் பட்டியலும் இருக்கத்தான் செய்கிறது.

    ஆழ்ந்த தூக்கத்தில் உங்களுக்கு அடிக்கடி சிரிப்பு வருமா ? இப்படி வருவது ஏதாவது பிரச்சனையா ? - Zio Tamil

    ஆனால், சிரிப்பதானால் ஏற்படும் பல நன்மைகள் உண்டு. நீங்க சிரிக்கும் போது, மிகவும் நிம்மதியாக உணர்வீர்கள். நீங்க சிரிக்க தொடங்கும்போது, அட்ரினலின் ஹார்மோன் குறையும். இயற்கையாகவே, எண்டோர்பின் ஹார்மோன் உடல் முழுவதும் சீராக பயணிப்பது அதிகரிக்கும். நீங்க சிரிப்பதைப் போல் நடித்தாலும், இது போன்ற நன்மைகள்-லா உங்க உடலுக்கு ஏற்படும். அதனால், வாய்ப்பு கிடைக்கும்போதுலாம் சத்தம் போட்டு நல்லா சிரிக்க மறந்துடாதீங்க!

    இதையும் படிங்க: 3 நாட்களாக வீட்டை உள்பக்கமாக பூட்டி மாந்திரீக பூஜை – தமிழகத்திலும் அரங்கேற இருந்த நரபலி சம்பவம்

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....