Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்திரையரங்கில் அமர்ந்து யாரும் படம் பார்க்க போவதில்லை...வாரிசு படம் குறித்து டான்ஸ் மாஸ்டர் ஜானி வெளியிட்ட...

    திரையரங்கில் அமர்ந்து யாரும் படம் பார்க்க போவதில்லை…வாரிசு படம் குறித்து டான்ஸ் மாஸ்டர் ஜானி வெளியிட்ட பரபரப்பு ட்விட் !

    நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் தொடர்பான தகவலை நடன இயக்குநர் ஜானி பகிர்ந்துள்ளார். 

    இந்திய நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். இவருக்கென்று பெரும் ரசிக பட்டாளமே இருக்கிறது. தற்போது இவர் ‘வாரிசு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குநர் வம்சி இயக்குகிறார். தில் ராஜூ தயாரிக்கிறார். 

    வாரிசு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. எப்படியாவது பொங்கலுக்கு திரைப்படத்தை ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் படக்குழு விறுவிறுப்பாக படப்பிடிப்புகளை நிகழ்த்தி வருகிறது. 

    நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. பாடல் காட்சி ஒன்று மட்டும் படமாக்காமல் இருப்பதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், நடன இயக்குநர் ஜானி தனது ட்விட்டர் பக்கத்தில், “தளபதி விஜய் ரசிகர்களே, என் வார்த்தைகளை குறிச்சு வச்சுக்கோங்க. தளபதி விஜய்யின் மாஸான நடனத்தைக் காண தயாராகுங்கள். எவரும் திரையரங்கில் அமர்ந்து படம் பார்க்கப்போவதில்லை” என குறிப்பிட்டுள்ளார். இத்துடன் பாடல் நடன ஒத்திகையின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். 

     இவரின் இந்த ட்விட் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பீஸ்ட் திரைப்படத்தில் நடன இயக்குநர் ஜானியின் நடன இயக்கத்தில் விஜய் ஆடிய ‘அரபிக்குத்து’ பாடல் பெரும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: அஜித்குமார் புகைப்படங்களால் குஷியான ரசிகர்கள்…..ஒருவேளை இருக்குமோ?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....