Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நடிகர் அர்னவ் விரைவில் கைது செய்யப்படுகிறாரா? தானாக கேசை கையில் எடுத்த கர்நாடக மகளிர் ஆணையம்

    நடிகர் அர்னவ் விரைவில் கைது செய்யப்படுகிறாரா? தானாக கேசை கையில் எடுத்த கர்நாடக மகளிர் ஆணையம்

    சின்னத்திரை நடிகை திவ்யா, அவரது காதல் கணவர் அர்னவ் விவகாரத்தில் கர்னாடக மகளிர் ஆணையம் தானாக முன்வந்து தலையிட்டுள்ளது.

    பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் ‘செவ்வந்தி’ தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் கர்நாடகத்தை சேர்ந்தவர். ‘கேளடி கண்மணி’ என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர். பிரபல தொடரான மகராசியில் இவர் நடித்திருந்தார். 

    புதுக்கோட்டையைச் சேர்ந்த நைனா முகமத் என்பவர் ‘அர்னவ்’ என்ற பெயரில் தற்போது ‘செல்லம்மா’ என்கிற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

    இந்நிலையில், திவ்யாவுக்கு அர்னவ்வுடன் கடந்த 2017 ஆம் ஆண்டில் தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு, இவர்கள் இருவரும் லிவ்-இன்னில் வாழ்ந்து வந்தனர். பின், திவ்யாவின் கட்டயாத்தின் பேரில், இவர்கள் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். 

    இதைத்தொடர்ந்து, தற்போது கணவர் தன்னை துன்புறுத்துவதாக திவ்யா இரண்டு காணொளிகளை வெளியிட்டார்.  அதில், தனது கணவர் அர்னவ் அடித்து தன்னை துன்புறுத்துவதாகவும், இதனால் தனது கருக்கலையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பரபரப்பு குற்றம் சாட்டினார்.

    பதிலுக்கு அரனவ், மனைவி திவ்யா மீது தனது தரப்பு நியாயங்களை கூறி பல புகார்களை அடுக்கி வருகிறார். இந்நிலையில், திவ்யா அளித்த புகாரின் பேரில் நடிகர் அர்னவ்வுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நடிகர் அர்னவ் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    மேலும், அக்டோபர் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை விசாரணைக்கு நேரில் வர வேண்டும் என போரூர் அனைத்து மகளிர் காவல்துறை சம்மன் அனுப்பியது. 

    ஆனால், அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்நிலையில், கூந்தம்பாக்கம் ஆர்.வி.கார்டனில் படப்பிடிப்பு இல்லத்தில் இருந்த அர்னவை போலீஸார் நேற்று (அக்டோபர் 14) கைது செய்தனர்.

    ஒரே வீட்டில் தனித்தனி அறையில் இருந்துகொண்டு இருவரும் மாறி மாறிப் புகார் வாசித்துக் கொண்டிருக்கும் இந்த விவகாரத்தில் அடுத்த சில நாட்களில் ஏதாவது முக்கியமான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு, கர்நாடகா என இரு மாநிலங்களின் மகளிர் ஆணையங்களின் தலையீடு வலுத்து வருகிறது.

    திவ்யா கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்த விவகாரத்தில் கர்நாடக மாநில மகளிர் ஆணையம் தானே முன்வந்து இந்த வழக்கில் தலையிட்டு இருக்கிறது.

    இது குறித்து திவ்யாவின் வழக்கறிஞர் பிரியாவிடம் பேசியதாவது:

    அர்னவ் அளித்த சில பேட்டிகளைப் பார்த்துட்டு தானே முன்வந்து தலையிட்டிருக்கு கர்நாடக மகளிர் ஆணையம். அங்க இருந்து தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தைத் தொடர்பு கொண்டு திவ்யாவுக்கு சட்ட ரீதியா உதவக் கேட்டிருக்காங்க.

    உடனே, தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் குமாரி எங்களைத் தொடர்பு கொண்டு கமிஷனுக்கு வரச் சொன்னாங்க. நாங்க போனோம். முறைப்படி புகாரும் தந்திருக்கிறோம்.

    அதன்படி, சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு மகளிர் ஆணையத் தலையீட்டுக்குப் பிறகு வேகமெடுத்திருக்கிறது. 

    இருப்பினும் காவல் துறையினர் சாதாரண, அதாவது சுலபமா ஜாமின்ல வெளிவரக் கூடிய செக்ஷன்களைப் போட்டு வழக்கை நீர்த்துப் போக வச்சிடுவாங்களோங்கிற அச்சமும் எங்களுக்கு இருக்கு. 

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில மகளிர் ஆணையத்துக்கு நாம் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது என இந்த விவகாரத்தை மிக கவனமுடன் அணுகுமாறு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் காவல்துறையை கேட்டுக்கொண்டுள்ளது. 

    இதையும் படிங்க: 3 நாட்களாக வீட்டை உள்பக்கமாக பூட்டி மாந்திரீக பூஜை – தமிழகத்திலும் அரங்கேற இருந்த நரபலி சம்பவம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....