Saturday, March 16, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்மனிதர்கள் ஒருவொருக்கொருவர் டெலிபதி செய்ய முடியுமா ?நீங்கள் அறிந்திராத சுவாரஷ்ய தகவல்கள்..

    மனிதர்கள் ஒருவொருக்கொருவர் டெலிபதி செய்ய முடியுமா ?நீங்கள் அறிந்திராத சுவாரஷ்ய தகவல்கள்..

    இப்பத்தான் உன் கூட பேசணும்-னு நினைச்சேன்… ஆனா நீயே phone பண்ற… என்று நண்பர்களுக்குள் அடிக்கடி கூறுவார்கள். நம்முடைய எண்ணங்கள் அலைவடிவில் பரவி அது நாம் யாரைப் பற்றி நினைக்கிறோமோ அவர்களைச் சென்றடைகிறது. இதனை டெலிபதி என்றும் கூறுவார்கள்.மனித எண்ணங்களுக்கு மாபெரும் சக்தி இருக்கிறது என்று பலர் கூறும் கூற்றும்…உலகில் நடக்கும் பல சம்பவங்கள் மூலம் உண்மையாகிறது.

    இப்படியாக மனிதனின் பலம் வாய்ந்த எண்ணங்கள் டெலிபதி ” மூலம் உண்மையாக பகிரப்பட்டால் எப்படி இருக்கும் …! காதலர்கள், தம்பதியர்கள் கூட நான் நினைச்சேன் நீ சொல்லிட்ட… என்னுடைய மனசுல இருக்கிறதை நீ புரிஞ்சிக்கிட்ட என்பார்கள். அதுபோன்ற ஒரு டெலிபதியை இப்போது அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

     

    Will humans evolve telepathic powers ? — Philosophy for Life

    மனிதர்கள் தகவல்களை பரிமாறி கொள்ள புதிய தொழிற்நுட்பமாக மாறும் ‘டெலிபதி’ குறித்த சுவாரசியமான தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க !

    கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் உதவியுடன், மனித மூளையை கம்ப்யூட்டருடன் இணைத்து அதன்மூலம் மனிதர்களின் எண்ணங்களை படிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்கான அதிநவீன கருவிகளை, தொழில்நுட்பங்களை உருவாக்கும் முயற்சியில் பல நிறுவனங்களும், விஞ்ஞானிகளும் தீவிரமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    மூளை-கம்ப்யூட்டரை இணைக்கும் ‘நியூராலிங்க்’ கருவி;

    உலக பணக்காரர்கள் வரிசையில் முதலில் இருக்கும் கோடீஸ்வர விஞ்ஞானி “எலான் மஸ்க்’-கின் ஆராய்ச்சி நிறுவனம் மனித மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் ‘நியூராலிங்க்’ கருவி தொழில் நுட்பத்தை உருவாக்கிவருகிறது. இந்த தொழில்நுட்பத்தை மனிதர்களிடம் பரிசோதித்துப் பார்ப்பதற்கு அனுமதி கோரி கடந்த ஆண்டு விண்ணப்பித்திருந்தது இந்நிறுவனம்.

    அதன்படி பன்றியின் மூலையில் இந்த கம்ப்யூட்டர் சிப்-பை பொருத்தி அதன் மூளையின் செயல்பாடுகளை கடந்த ஒரு வருடமாக ஆராய்ச்சி செய்து வருகிறது ஆராய்ச்சி குழு.

    அதன் ஒரு அங்கமாக, டெலிபதி என கூறப்படும் மூலையில் செய்திகளை மாற்றிக்கொள்ளும் தொழில்நுட்பமும் இன்னும் பத்து ஆண்டுகளில் உலகில் அறிமுகபடுத்தப்படும் என்று நம்ப படுகிறது.

    சுமார் ஓராண்டுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட நியூராலிங்க் கருவியின் முதல் பதிப்பு தற்போது எளிமையாக்கப்பட்டு, சிறியதாக மாற்றப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் கூறினார்.

    இந்த ‘நியூராலிங்க்’ கருவியை காதோரமாக பொருத்திக்கொண்டால் போதும் கம்ப்யூட்டருடன் இணைந்து மனித மூளை செயல்படும். வெறும் கற்பனையாக இருந்த டெலிபதிக்கு கம்ப்யூட்டர் வந்ததும் கொஞ்சம் உயிர் வந்துவிடும் .

    Elon Musk unveils updated Neuralink brain implant design and surgical robot

    அதையடுத்து, artificial intelligence அதாவது செயற்கை நுண்ணறிவு என்ற துறை வளர்ந்ததும் ‘டெலிபதி’ குறித்த கற்பனைகள் இன்னும் வலுவடையும்.

    “இது உண்மையில் உங்கள் மண்டை ஓட்டில் மிகவும் நன்றாக பொருந்துகிறது. இது உங்கள் தலைமுடியின் கீழ் இருக்கக்கூடும், ஆனால் அது உங்களுக்குத் தெரியாது.”

    2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், உருவாக்கும் நியூராலிங்க் கருவி ஒரு மனித தலைமுடியை விட மெல்லிய நெகிழ்வான நூல்களுடன் இணைக்கப்பட்ட 3,000க்கும் மேற்பட்ட மின்முனைகளைக் கொண்டுள்ளது. இது 1,000 மூளை நரம்பணுக்களின் செயல்பாட்டைக் கண்காணிக்க முடியும்.

    இதையும் படிங்க: இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் புதுவகை கிரிக்கெட் போட்டி….உற்சாகத்தில் ரசிகர்கள்!

    அதோடு மட்டுமில்லாமல், மனித மூளையையும் இயந்திரங்களையும் இணைக்கும் இந்த கம்ப்யூட்டர் சிப் நரம்பியல் குறைபாடு உள்ளவர்கள் தங்களது மூளை மூலம் திறன்பேசிகள் அல்லது கணினிகளை கட்டுப்படுத்த வழிவகை செய்யும் என்று மஸ்க் கூறுகிறார்.

    பிற்காலத்தில் மறதி நோய், Parkinson’s நோய் மற்றும் முதுகெலும்பு காயங்கள் போன்ற நிலைமைகளை குணப்படுத்த இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

    ஆனால் இந்த திட்டத்தின் நீண்டகால நோக்கமே, “மனிதர்களின் உச்சகட்ட அறிவாற்றல் யுகம்” என்று எலான் மஸ்க் கூறும் ஒரு யுகத்துக்குள் நுழைவதுதான் என்று கூறப்படுகிறது. அத்தகைய ஒரு யுகத்தில் செயற்கை நுண்ணறிவு’ மனித குலத்தை அழிக்கும் அளவுக்கு பலம் பெற்றுவிடும் என்றும் அப்போது அதை எதிர்த்துப் போராடுவதற்கு தயாராக வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

    லண்டனில் உள்ள ராயல் சொசைட்டியின் சமீபத்திய ஒரு ஆய்வறிக்கையில், கம்ப்யூட்டர் மற்றும் மூளையை இணைக்கும் சிப் தொழில்நுட்பத்தின் நன்மைகள் மற்றும் அவை தீய சக்திகளின் கையில் கிடைத்தால் அதனால் மனித குலத்துக்கு ஏற்படக்கூடிய மிகப்பெரிய ஆபத்துகள் பற்றிய எச்சரிக்கைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Brain computer interfaces — Why & why now? | by Sandip Kamat | Above Intelligent™ — Latest in Artificial Intelligence

    இனி வரும் காலங்களில் தற்போது கம்ப்யூட்டர் அல்லது செல்போன் மூலம் வீடியோ சாட்டிங்கில் பேசிக்கொள்வது போல மனித மூளையுடன் நேரடியாக தகவல்களை பரிமாறிக்கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இது குறித்து Harvard பல்கலைகழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வளர்ந்து வரும் தொழிற்நுட்பங்கள் என்னதான் மனித வாழ்க்கையை எளிதாக்கினாலும்… இயற்கையை மாற்றி மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு நாள் ஆபத்தில் முடியவும் அதிக வாய்ப்பு உள்ளது.

    இதையும் படிங்க:  அஜித்குமார் புகைப்படங்களால் குஷியான ரசிகர்கள்…..ஒருவேளை இருக்குமோ?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....