Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு'பண்டக்குழி' கேள்விப்படிருக்கிங்களா? அப்டின்னா...?உள்ள வந்து பாருங்க..

    ‘பண்டக்குழி’ கேள்விப்படிருக்கிங்களா? அப்டின்னா…?உள்ள வந்து பாருங்க..

    பண்டைய காலத்தில் தானியங்களைச் சேமிக்க பயன்படுத்தப்பட்ட ‘பண்டக்குழி’ கண்டிறியப்பட்டுள்ளது. 

    திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே காவேரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் தனது வயலில் டிராக்டர் மூலமாக உழுது கொண்டிருந்தபோது, இரும்பு கலப்பையில் பெரிய பாறாங்கல் ஒன்று சிக்கி பெயர்ந்து வந்துள்ளது. 

    அதை அகற்றிப் பார்த்த போது, அந்த இடத்தில் சுமார் 10 அடி ஆழம் கொண்ட குழி ஒன்று தெரிந்தது. இதைப்பற்றி நிலத்தின் உரிமையாளர் சங்கர், வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தார். 

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் துறை அதிகாரிகள் அந்தக் குழியை ஆய்வு செய்தனர். அப்போது அது பண்டைய காலத்தில் தானியங்களைச் சேமிக்க பயன்படுத்தப்பட்ட ‘பண்டக்குழி’ என்பது கண்டறியப்பட்டது. 

    இது எந்தக் காலத்தில் உருவாக்கப்பட்டது என்பது குறித்து தற்போது அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: வயிறெரியுது ‘போலீசுக்கே இந்த கொடுமைனா என்னத்த சொல்லுறது….’ – நடிகை கஸ்தூரி செய்த ட்விட்

    பண்டக்குழி என்பது என்ன?

    விவசாய நிலங்களை உழும் போதோ அல்லது கிணறுகள் தோண்டும் போதோ இப்பண்டக் குழிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. வீட்டை சீரமைக்க தரைப் பகுதியைத் தோண்டும் பொழுது இப்பண்டக் குழிகள் தென்பட வாய்ப்புகள் அதிகம். சில மிகப் பழமையான வீடுகளிலும் தரைப்பகுதியின் கீழ் இப்பண்டக் குழிகள் அமைக்கப்பட்டிருக்கும். 

    இந்தப் பண்டக் குழிகள் குறுகிய வாய்ப் பகுதியுடன் கீழே செல்லச் செல்ல அதிக அகலமாக அமைக்கப்பட்டிருக்கும். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இப்படிப்பட்ட பெரிய பண்டக்குழி இருக்கும் அடையாளம் யாருக்குமே தெரியாது. 

    பண்டங்கள் என்பதற்கு தானியங்கள் என்றும் விளைப் பொருட்கள் என்றும் பொருள். பண்டம் என்ற சொல் அனைத்து தமிழ் இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளது. 

    பண்டைய வாணிப முறைகளில் பண்டமாற்று முறையும் ஒன்று. அத்தகைய பண்டங்களை சேமித்து வைக்க பண்டைய காலத்து மக்கள் பயன்படுத்திய கொள்கலன்கள் வகைகளில் ஒன்றுதான் பண்டக்குழிகள். தானியங்கள் நிரப்பப்பட்டவுடன் வாய்ப்பகுதியின் மேல்பகுதியில் வைக்கோல் அல்லது கற்பலகைகள் கொண்டு மூடி அதன் மேல் மண்ணை பரப்பிவிடுவது வழக்கம்.

    இதையும் படிங்க: 142-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட அதிசய பாம்பு; மீண்டும் வந்தது எப்படி?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....