Saturday, March 16, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரைமுத்தங்களும் முத்தங்களின் எண்ணிக்கையும் போட்டி போடட்டும் - கிஸ் டே ஸ்பெஷல்!

    முத்தங்களும் முத்தங்களின் எண்ணிக்கையும் போட்டி போடட்டும் – கிஸ் டே ஸ்பெஷல்!

    காதலர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று முத்த தினம் எனப்படும் கிஸ் டே கொண்டாடப்படுகிறது. வேலண்டைன்ஸ் டேவை முன்னிட்டு ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, பிராமிஸ் டே, ஹக் டே போன்றவற்றைத் தாண்டி இன்று கிஸ் டே!

    அவசர அவசரமாக தின வாழ்வை அணுகிக் கொண்டிருக்கும் மனிதர்கள், அன்பை, அன்பின் சாட்சியங்களை வெளிப்படுத்துவதே அரிதாகவிட்டது. அப்படி வெளிப்படுத்தினாலும், அது பெரும்பாலும் கைப்பேசியின் எழுத்துருக்கள் வாயிலாகவே நடைபெறுகிறது. 

    kiss

    அன்பின் சாட்சியங்களில் முக்கியமானதாக கருதப்படுவது முத்தம். பெரும்பான்மையான படங்களில் காட்டுவதுப் போல, கதையில் உள்ளதுப் போல முத்தம் என்பது காமம் சார்ந்தவை மட்டுமல்ல. அது அன்பையும் சார்ந்தவை. காமத்தின்பால் கொடுக்கப்படும் முத்தங்களுக்கும், வெறுமனே அன்பின்பால் மட்டும் கொடுக்கப்படும் முத்தங்களுக்கும் வேறுபாடுகள் உண்டு. அதேநேரம், காமமும், அன்பும் காதலில் திளைத்திருப்பதுதான் அதன் அழகுகளில் ஒன்று. 

    தற்போதைய காலக்கட்டத்தில் காதலர்களுக்கு உள்ளாகவே முத்தம் காமத்தின் பேரால் மட்டுமே பெரும்பாலும் தரப்படுகிறது என்கிறது ஆய்வு. கூடல் முடிந்தப் பின்பு முத்தம் தருவது தற்காலத்து இணைகளிடம் குறைந்துவிட்டதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. இது ஒருபுறம் என்றால், மற்றொரு புறம் பெயருக்கென கொடுக்கப்படும் பாசாங்கின் தோற்றமாக முத்தம் மாறி வருகிறது. 

    அன்பின் உணர்ச்சியற்ற முத்தங்கள் முழுமை அடைவதில்லை. இணைகள் முத்தங்களை காமத்தின்பால் மட்டும் பறிமாறாது, காமம் அற்ற அன்பினோடும் முத்தங்களை பறிமாறிக்கொள்ள வேண்டும். இந்த பரிமாற்றம் உறவை மேம்படுத்த உதவும் என்று ஆய்வியலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. முத்தம் மன அழுத்தத்தை குறைக்கவல்லது என்பது ஒரு முக்கியமான விடயமாகும். இந்த விடயத்தின் அடிப்படையிலேயே முத்த பறிமாற்றம் உறவை மேம்படுத்த உதவும் என்று ஆய்வியலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

    எது எப்படியாக இருந்தாலும், பொதுவாகவே, காதலர்களுக்கு இடையேயான முத்த பறிமாற்றங்கள் குறைந்துவிட்டதாக அறியப்படுகிறது. அப்படியே முத்தங்கள் பறிமாறப்பட்டாலும், அவை காமத்தின்பால் மட்டுமே நிகழ்கிறது. 

    ‘ மின் முத்தம் ஏதும் மெய் முத்தம் போலே அல்ல’ 

    – மதன் கார்கி 

    முத்த தினமான இன்று காமத்தோடு நிறுத்தாமல், அன்பின் பேரிலும் முத்த பரிமாற்றம் நிகழட்டும். கைப்பேசியின் வழியே இணைகளுக்கு அனுப்பப்படும் மின் முத்தங்கள், நிஜ முத்தங்களின் எண்ணிக்கையோடு போட்டி போடட்டும். 

     கட்டிப்பிடிக்கும் போது துயரத்தின் எடையிழப்பு நிகழும்; ஹக் டே ஸ்பெஷல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....