Tuesday, May 16, 2023
மேலும்
  Homeவாழ்வியல்ஆரோக்கியம்உங்க எடையை குறைக்கனுமா? அப்போ இதை செய்யுங்க....

  உங்க எடையை குறைக்கனுமா? அப்போ இதை செய்யுங்க….

  காய்கறிகள் இல்லாத சாப்பாடு ஒரு முழுமையான உணவை சாப்பிட்ட திருப்தியை தராது. சில காய்கறிகளை அனைவரும் விரும்பி சாப்பிடமாட்டார்கள். ஆனால் சில காய்கறிகளை எல்லோரும் மிகவும் விரும்பி உண்பார்கள். அப்படிப்பட்ட காய்கறிகளில் ஒன்று தான் “முட்டைகோஸ்”. இது முழுவதும் இலைகளால் ஆன ஒரு காய் வகையாகும்.

  மேலும் முட்டைகோஸில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அவை வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை. இவை அனைத்திலும் நல்ல அளவில் சத்துக்கள் அடங்கியுள்ளன.

  நியூட்ரியண்டுகள் .. 

  இதில் உள்ள பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்றவை உள்ளன. இவை அனைத்தும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவற்றை ஏற்படுவதை தடுக்கும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும்.

  இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும். பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும். நரம்புகளுக்கு வலு கொடுக்கும்.

  உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.
  முட்டைகோஸில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் சருமத்தில் ஏற்படக்கூடிய பரு, கரும்புள்ளிகளை நீக்கி சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

  முட்டைகோஸ் தண்ணீரில் சல்ஃபர் இருக்கும். எனவே முட்டைகோஸ் வேக வைத்த தண்ணீரில் உங்கள் கூந்தலை அலசுவதால் அது தலைமுடிக்கு நல்ல பலனை கொடுக்கிறது. முட்டை கோஸை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

  உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு முட்டைகோஸ் ஜூஸ் நல்ல பலனை தரும். இதில் குறைவான கலோரியே உள்ளதால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். மேலும் வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய அல்சைமர் பிரச்சனைகளை வராமல் இது தடுக்கும்.

  முட்டைகோஸை சமைத்து சாப்பிடும் போது அளவுக்கு அதிகமாக வேக வைக்ககூடாது, அப்படி செய்தால் அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். எனவே முட்டைகோஸை ஜூஸாக செய்து சாப்பிடலாம்.

  இதற்கு முதலில், முட்டைகோஸை எடுத்து சுடு தண்ணீர் அல்லது வினிகரில் போட்டு சிறிது நேரம் ஊற வைக்க  வேண்டும். இதன் மூலம் முட்டைகோஸில் உள்ள புழுக்கள் அல்லது பூச்சிக்கொல்லி மருந்துகள் முழுமையாக வெளியேறும்.

  முட்டைக்கோஸ் ஜூஸ்..

  பின்னர் மிக்சியில் போட்டு அரைத்தால் ஜூஸ் ரெடி, ஒருநாளைக்கு ஒரு டம்ளருக்கு மேல் ஜூஸ் பருகக்கூடாது. முடிந்த அளவு இந்த ஜூஸ் தயாரித்தவுடன் குடியுங்கள். அப்போது தான் சிறந்த பலனை பெற முடியும்.

  முட்டைக்கோஸ் ஜூஸ் அல்சர் பிரச்சனைக்கு உதவும். இது குடலை சுத்தம் செய்து, தொல்லைத்தரும் அல்சரை குணமாக்கும். மேலும் முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால், வயிற்றின் உட்படலம் வலிமையடைந்து, இனிமேல் அல்சர் வராமல் தடுக்கும்.

  பல்வேறு வகையான புற்றுநோயின் அபாயத்தை முட்டைக்கோஸ் ஜூஸ் குறைக்கும். இதற்கு அதில் உள்ள சல்போராபேன் தான் காரணம். இது தான் கார்சினோஜென்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள ஐசோசையனேட் நுரையீரல், வயிறு, மார்பகம் மற்றும் குடல் புற்றுநோய் வராமல் நல்ல பாதுகாப்பை வழங்கும்.

  முட்டைக்கோஸ் ஜூஸ் குடித்து வருவதன் மூலமும் கண்புரையைத் தடுக்கலாம்.
  முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் கே, ஆந்தோசையனின், மூளையின் செயல்பாட்டை கூர்மையாக்கி, ஒரு செயலில் மனதை ஒருமுகப்படுத்த உதவும். மேலும் முட்டைக்கோஸ் ஜூஸ் அல்சைமர் நோயின் அபாயத்தைக் குறைக்கும்.

  முட்டைக்கோஸில் கலோரிகள் குறைவு. தினமும் முட்டைகோஸ் ஜூஸ் குடித்து வந்தால், கழிவுகள் வெளியேற்றப்பட்டு விரைவில் உடல் எடை குறைந்துவிடும்.

  “வரவு எட்டனா செலவு பத்தனா” நிலையை போக்க வேண்டுமா? இதைப் படியுங்கள்!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....