Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உக்ரைன் கிழக்கு பகுதிகளை அபகரிக்க ரஷ்யா திட்டம் - அமெரிக்கா குற்றச்சாட்டு

    உக்ரைன் கிழக்கு பகுதிகளை அபகரிக்க ரஷ்யா திட்டம் – அமெரிக்கா குற்றச்சாட்டு

    நேட்டோ அமைப்பில் இணைய முயற்சித்தது மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் உறவு வைத்தது உள்ளிட்ட நடவடிக்கைகளால் ரஷ்யாவின் கோபத்திற்கு உள்ளானது உக்ரைன்.

    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவை அடுத்து, உக்ரைன் நாட்டின் மீது, கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து, ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

    இரண்டு மாதத்தை கடந்தும் போர் நடைபெற்று வரும் நிலையில், இதனால் பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    உக்ரைன் நாட்டின் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை சரி செய்ய வேண்டும் என்றும் அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கோரிக்கை விடுத்தனர். எனினும் இதற்கு விளாடிமிர் புடின் செவி சாய்க்கவில்லை.

    உக்ரைன் மீதான ரஷ்யப் படைகளின் படையெடுப்பு காரணமாக அந்நாட்டில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

    உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டி வரும் உலக நாடுகள், ரஷ்யாவிற்கு எதிர்வினையாற்றும் வகையில் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. போரை நிறுத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் அதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    இந்நிலையில், உக்ரைனின் கிழக்கு பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைக்க ரஷ்யா திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

    இது தொடர்பாக, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமெரிக்க தூதர் மைக்கேல் கார்பென்டர் தெரிவித்ததாவது:

    உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான கெர்சன் நகரையும் சுதந்திர குடியரசாக அங்கீகரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ள அவர், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆதிக்க நடவடிக்கைகளை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஒருபோதும் அங்கீகரிக்காது என தெரிவித்துள்ளார்.

    கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் நகர மேயர்கள், அதிகாரிகள் கடத்தப்பட்டுள்ளதும், அங்கு இணையம் மற்றும் செல்போன் சேவைகள் துண்டிக்கப்பட்டிருப்பதும் ரஷ்யாவின் நடவடிக்கைகளை உறுதிபடுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

    உங்க எடையை குறைக்கனுமா? அப்போ இதை செய்யுங்க….

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....