Monday, March 18, 2024
மேலும்
    Homeஅறிவியல்இனி வெப்பம் மட்டுமல்ல; நோயும் அதிகரிக்கப் போகிறது - வெளிவந்த உண்மைகள்!

    இனி வெப்பம் மட்டுமல்ல; நோயும் அதிகரிக்கப் போகிறது – வெளிவந்த உண்மைகள்!

    பனிக்காலம் முடிந்து கோடைகாலம் தொடுங்குவதற்கு முன்னாள் உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் பல்வேறு தொற்றுகள் புதியதாக உருவாவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

    பல தொற்றுநோய்கள் பருவநிலை மாற்ற காலத்தில் உருவாகி மறைந்துவிடுகின்றன. சளி, காய்ச்சல் குளிரான மாதங்களில் வருகிறது, வாந்தியை ஏற்படுத்தும் நோரோ வைரஸ் போன்ற கிருமிகள் மற்றும் டைபாய்டு போன்ற மற்ற நோய்கள் வெயில் காலத்தில் அதிகமாகின்றன.

    வெப்பமான பருவநிலைகளில் தட்டம்மை பாதிப்பு குறைகிறது. வெப்ப மண்டல நாடுகளில் வறண்ட பருவத்தில் அது அதிகரிக்கிறது. அடுத்த ஐம்பது ஆண்டுகளில், பருவநிலை மாறுதலால் பல சீர்குலைவுகள் நிகழக் காத்திருக்கின்றன. அவற்றில் ஒன்று, பாலுாட்டிகள், பிற பாலுாட்டி இனங்களுக்கு வைரஸ் தொற்றுக்களைப் பரப்புவது அதிகரிக்கும் என்பதாகும்.

    இதன் தொடர்பாக ‘நேச்சர்’ இதழில் கூறியிருப்பது: அடுத்து வரும் ஐம்பது ஆண்டுகளில் பதினைந்தாயிரம் ஆயிரம் புதிய வைரஸ் தொற்றுக்கள் பரவும் என அறிவித்து உள்ளனர்.

    புவி வெப்பமாதல் அதிகரிக்கும்போது, பாலுாட்டிகள் குளிர்ச்சியான பிரதேசங்களில் நெருக்கியடித்து வாழ நேரிடும். இந்த நெருக்கத்தால், தொற்றுக்கள் எளிதாகப் பரவத்துவங்கும் என்கிறது அந்த ஆய்வு.

    மேலும், கடல் மட்டத்திற்கு அதிக உயரத்தில் உள்ள இடங்களில் தான் பல்லுயிர் அடர்த்தி அதிகம். இதனால் ஆசியா ஆப்ரிக்கா கண்டங்கள் மிக பெரும் தொற்று தாக்குதல்களை சந்திக்க நேரிடும்.

    குறிப்பாக, மனித அடர்த்தி அதிகமுள்ள ஆப்ரிக்காவின் சாஹேல் பகுதி மற்றும் இந்தியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகள், அடுத்த அரை நுாற்றாண்டில் அதிகமான தொற்றுக்களை சந்திக்க நேரிடும்.

    என்னென்ன நோய்கள் வரக்கூடும்?

    இந்தியாவை பொறுத்தவரை பருவகால நோய்களான காய்ச்சல், டெங்கு, மலேரியா, டைபாய்டு மற்றும் அந்த நோய்த்தொற்றுகளைப் பிரதிபலிக்கும் சில வைரஸ் தொற்றுகள் வரக்கூடும்.

    இந்நோய்கள் பரவுவதற்கான காரணங்களாக நீர் அடைப்பு, நீர்நிலைகள் மாசுபடுதல், முறையற்ற சுத்திகரிப்பு, மழைநீர் குட்டைகள் மற்றும் நெரிசல் ஆகியவை அடங்கும்.

    காய்ச்சலானது நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது, டெங்கு மற்றும் மலேரியா கொசுக்கடி மற்றும் வயிற்றுப்போக்கு நோயால் ஏற்படுகிறது மற்றும் அசுத்தமான தண்ணீரை உட்கொள்வதால் நீரில் பரவும் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.

    சளி, இருமல், தும்மல், விரைவான சுவாசம், தளர்வான மலம், வாந்தி, தலைவலி, உடல்வலி, காய்ச்சல், உணவுகளை மறுப்பது ஆகியவை காய்ச்சல் போன்ற நோயுடன் தொடர்புடைய பொதுவான அறிகுறிகளில் சில.

    இந்த நோய்த்தொற்றுகளில் பெரும்பாலானவை எளிதில் கண்டறியப்பட்டு மருந்துகளின் மூலம் திறம்பட சிகிச்சையளிக்க முடியும், மேலும் காய்ச்சல் மற்றும் டைபாய்டு போன்ற நோய்கள் தடுப்பூசிகளால் தடுக்கப்படுகின்றன.

    இனி வரும் ஆண்டுகள், வெப்பம் தகிப்பவையாக இருப்பதோடு, நோய்களால் பெருக்கெடுத்தும் இருக்கப்போகின்றன. அதுவும், ஆயிரத்திற்கு மேற்பட்ட தொற்றுக்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    உக்ரைன் கிழக்கு பகுதிகளை அபகரிக்க ரஷ்யா திட்டம் – அமெரிக்கா குற்றச்சாட்டு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....