Monday, March 18, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரைசிறைவாசத்திலும் சுதந்திர வாசத்தை உலகம் முழுவதும் பரப்பிய நெல்சன் மண்டேலா - சிறப்பு பார்வை!

    சிறைவாசத்திலும் சுதந்திர வாசத்தை உலகம் முழுவதும் பரப்பிய நெல்சன் மண்டேலா – சிறப்பு பார்வை!

    தென்னாப்பிரிக்காவில் சரித்திரம் படைக்க 1950 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதியில் உள்ள குலு என்ற கிராமத்தில் பிறந்தார் நெல்சன் மண்டேலா. அப்பொழுது தான் முதல் உலகப்போர் முடிவுக்கு வந்திருந்தது. இவரது தந்தை சோசா பழங்குடி இன மக்கள் தலைவர் ஆவார். இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக மொத்தம் 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர் தான் மண்டேலா.

    இவரின் முழுப்பெயர் ‘நெல்சன் ரோபிசலா மண்டேலா’. மக்கள் இவரை நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். இவர் சிறுவயதில் சிறந்த குத்துச் சண்டை வீரராக திகழ்ந்தார்.

    முதல் முறை பள்ளிப்படிப்பு:

    இவரது ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். அதன் பின், ஆடு மேய்த்துக்கொண்டே தனது படிப்பை தொடர்ந்தார். அவர் குடும்பத்திலேயே முதன் முதலில் பள்ளிக்குச் சென்றவர் மண்டேலாதான். ஒரு கையில் ஆடு மேய்க்கும் குச்சி, இன்னொரு கையில் படிக்கும் பாடப்புத்தகம் என பள்ளிப்பருவத்தைக் கடந்தவரால், அவரது கல்லூரிப்பருவத்தை எளிதாகக் கடக்க முடியவில்லை.

    நிறவெறிகொண்ட வெள்ளையர்கள், பூர்வகுடி கறுப்பின மக்களுக்கு பல தொல்லைகளை கொடுத்தனர். தென்னாப்பிரிக்காவின் பெரும்பான்மையான பூர்வகுடி கருப்பின மக்களை, பிரிட்டிஷ், பிரான்ஸ், டச்சு உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலிருந்து குடியேறிய சிறுபான்மை வெள்ளையர்கள் அடிமை செய்து ஆளத்தொடங்கினர். தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்கள், தங்கள் தாய்மண்ணிலேயே சொந்தமாக நிலம் வைத்துக்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டனர்.

    ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டனர். ஒரே நாட்டுக்குள் பயணிக்க வெள்ளையர்கள் எங்களின் அனுமதியும், பாஸ்போர்ட் உரிமமும் கொண்டிருக்க வேண்டும் எனக் கண்டிக்கப்பட்டனர். மக்களின் வாக்களிக்கும் உரிமைகூட பறிக்கப்பட்டு, உள்நாட்டு அகதிகளாக நடத்தப்பட்டனர். கொத்தடிமைகளாக சுரங்கப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    கல்வி : 

    இத்தகைய கொடுமைகளை கண்ட நெல்சன் மண்டேலா “இனி தனது மக்களின் விடுதலை வாழ்வுக்கு போராட முடிவு எடுத்தார். அதிகாரக் கைப்பற்றலும், உரிமை நிலைநாட்டலும்தான், வெள்ளை ஏகாதிபத்தியத்தியத்தை உடைத்து கறுப்பின மக்களுக்கான விடுதலையை வென்றுதரும்”என்ற அரசியல் பாடத்தை கற்க ஆரம்பித்தார், நெல்சன் மண்டேலா.

    மேலும் இவர் போர் புரியும் கலைகளையும் பயின்றார். இவரின் பெயரின் முன்னால் உள்ள “நெல்சன்” இவர் கல்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியரினால் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா, லண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார்.

    1941 ஆம் ஆண்டு ஜோகானஸ்பேர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி வந்தார்.

    திருமணம்:

    அப்போது ‘நோமதாம் சங்கர்’ என்ற செவிலியரைத் திருமணம் செய்து கொண்டார். மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென்னாப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியைத் தடை செய்தது. இதனால் மண்டேலா அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது.

    ஐந்தாண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958 ஆம் ஆண்டு வின்னி மடிகி லேனா என்பவரை மணந்தார். வின்னி தனது கணவரின் கொள்கைகளுக்காகப் போராடி வந்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகளும் 2 வது மனைவி மூலம் 2 குழந்தைகளும் உள்ளனர்.

    வெள்ளையர்களுக்கு எதிரான தனது முதல் அடியை 21 வயதில் எடுத்து வைத்தார்.”கறுப்பின மக்களாகிய நாம் அடக்கப்படுகிறோம். நமக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. நாம் பயணம் செய்வதற்கு நம் நாட்டினுள்ளேயே அனுமதி பெற வேண்டியுள்ளது. நிலவுடமையாளர்களாக நம் கறுப்பின மக்கள் இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இவை சொந்த மக்களுக்கு எதிரானவை. நீதியற்றவை. இவற்றிற்கு எதிராக நாம் போராட வேண்டும்” என தனது இன மக்களுக்கு புரிய வைக்க தொடங்கினார், நெல்சன் மண்டேலா.

    உயர்ந்த சிந்தனை உயர்ந்த
    மனதில் இருந்தே தோன்றுகின்றது.

    வறுமை தொடரும் போது
    உண்மையான விடுதலை இருப்பதில்லை.

    1961 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப்படைத் தலைவராக மண்டேலா உருவெடுத்தார். இதை உருவாக்கியதிலும் இவருக்கு பங்குண்டு. வெளிநாட்டு நட்பு சக்திகளிடமிருந்து பணம் மற்றும் இராணுவ உதவிகளைப் பெற்று, அரசு மற்றும் இராணுவ கேந்திர நிலையங்கள் மீது கெரில்லா பாணியிலான தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடத்தினார்.

    “ஒருவர் வாழ்வில் தோல்வியே
    அடையாததால் உலகப் புகழ் பெறுவதில்லை.

    ஒவ்வொரு தோல்வியிலும் துவளாது மீண்டும் மீண்டும்
    எழுவதில் தான் புகழ் பெறுகிறார்கள்”.

    1961, திசம்பர் 16 ஆம் நாள் இனவெறிக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் நடத்தப்பட்டது. அரசாங்கம் கடுமையாக கெடுபிடி செய்ததால் 1961 ம் ஆண்டில் மண்டேலா தலைமறைவானார்.

    அவரை பிடிக்க வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பின்னாளில் இவர் தலைமை வகித்த அமைப்பினரின் நடவடிக்கைகளால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.

    இனவெறிக்கு எதிரான இவரது போர் நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனைக் காரணம் காட்டி அமெரிக்காவும் இவர் மீது பயங்கரவாத முத்திரைக் குத்தியது. மண்டேலா அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான தடை ஜூலை, 2008 வரை நடைமுறையில் இருந்தது என்பது குறிப்பிடதக்கது.

    சிறைவாசம்:

    1962, ஆகஸ்ட் 05 ஆம் நாள் இவர் தங்கியிருந்த பகுதிக்குள் மாறு வேடமணிந்து புகுந்த காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைதாகினார்.அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தமை, அமைதியைக் குலைத்தமை, கலகத்தை உருவாக்கியமை என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

    இவ்வழக்கு 1963 இல் ரிவோனியா செயற்பாடு (process Rivonia) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மண்டேலாவுக்கு 1964 ஆம் ஆண்டு சூன் 12ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது. அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாகத் தொடர்ந்தது.

    உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது.

    Mandela

    பல ஆண்டுகள் அவரைத் தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்தது தென்னாப்பிரிக்க அரசாங்கம். அவரது மனைவியைச் சந்திப்பதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.

    மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார்.

    மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் மனைவி தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.

    “மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்” என்று தென்னாப்பிரிக்கா அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். தென்னாப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக டெக்ளார்க் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார். இதனால் மண்டேலாவின் விடுதலை நாளை உலகமே கொண்டாடியது என்று சொன்னால் மிகையாகாது.

    1990ல் மண்டேலா சிறையிலிருந்து விடுதலை பெற்றார்..விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71. இந்நிகழ்வு உலகம் முழுவதும் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.

    தென்னாப்பிரிக்கா அரசு அறிவித்தபடியே பிப்ரவரி 11, 1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலைச் செய்யப்பட்டார். மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. இந்தியா சார்பாக பிரதமர் வி. பி. சிங் தலைமையில் வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது.

    மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்கா நாட்டுத் தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.

    மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலக தலைவர்கள் பலர் வரவேற்றார்கள். கேப்டவுன் நகருக்கு திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார்.

    அவர் கூறியதாவது:-

    “இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வதேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது.

    நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்.”

    1994, மே 10 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார். அதிபர் ஆனப்பின், 1998 ம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்கப் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடுச் செய்தார்.

    புத்தக வாசிப்பிற்கு
    அனுமதித்தால் போதும்
    சிறையும் சுதந்திரமான
    இடம் தான்.

    நோபல் பரிசுபெற்ற நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்ததன் பின் 1999 இல் பதவியை விட்டு விலகினார். இவர் 2வது முறை அதிபர் பதவிக்கு போட்டியிட மறுத்துவிட்டார்.

    எனது வெற்றிகள் மூலம்
    என்னை மதிப்பிடாதீர்கள்!
    எத்தனை முறை நான்
    கீழே விழுந்து மீண்டும்
    மீண்டும் எழுந்தேன்
    என்பதன் மூலம்
    என்னை மதிப்பிடுங்கள்.

    நெல்சன் மண்டேலா பெற்ற விருதுகள்:

    1.நேரு சமாதான விருது”

    உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு “நேரு சமாதான விருது” வழங்கியது. கணவர் சார்பில் வின்னி நெல்சன் டெல்லிக்கு வந்து அந்த விருதைப் பெற்றார்.

    2. பாரத ரத்னா விருது

    1990-ல் இந்தியாவின் ‘பாரத ரத்னா’ விருதும் வழங்கப்பட்டது. நெல்சன் மண்டேலா ஒருவருக்கு மட்டுமே இந்தியர் அல்லாத ஒருவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    3.நோபல் பரிசு‍

    1993 இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் திருவுருவச்சிலை

    ரசிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள் முன்னிலையில், சர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ஆபிரகாம் லிங்கன் அருகில் நெல்சன் மண்டேலாவின் ஒரு வெண்கல சிற்பம் 30 ஆகஸ்ட் 2007 இல் இங்கிலாந்து பாராளுமன்ற சதுக்கத்தில் வைக்கப்பட்டது.

    அது குறித்த ஒரு உரையில், நெல்சன் மண்டேலா பாராளுமன்ற சதுக்கத்தில் கருப்பு மனிதன் ஒருவனின் சிலை இருக்கும் என்று 1962 இல் கண்ட கனவு நிறைவேறியது என்று கூறினார்.

    நிறவெறி கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்துக்கு தனது வாழ்நாளையே அர்ப்பணித்த நெல்சன் மண்டேலாவை உலக நாடுகள் பலவும் உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்தது. அந்த வகையில் சுமார் 250க்கும் மேற்பட்ட விருதுகளை மண்டேலா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒரு சாதாரண மனிதனாக பிறந்து, மக்களுக்காக போராடும் ஒரு போராளியாக, அரசியல்வாதியாக, சிறைக் கைதியாக, ஜனாதிபதியாக தனது வாழ்நாள் முழுவதையும் அர்பணித்துக்கொண்ட நெல்சன் மண்டேலா, 2013-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் நாள் தனது 95-வது வயதில் மரணமடைந்தார்.

    நெல்சன் மண்டேலாவின் தியாகத்தை போற்றும் வகையில், அவர் பிறந்த ஜூலை 18-ம் நாளை, “உலக நெல்சன் மண்டேலா தினமாக” ஐ.நா. சபை அறிவித்து கொண்டாடி வருகிறது.

    கனவு நாயகன் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....