Tuesday, March 19, 2024
மேலும்
  Homeசிறப்பு கட்டுரைகனவு நாயகன் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு!

  கனவு நாயகன் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு!

  சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது அதற்கான முயற்சியில் ஈடுபட்டால் மட்டுமே சாதிக்க முடியும். உலக வாழ்வில் ஒளிர வேண்டுமென்றால் அவரவருக்கான பக்கங்களை உருவாக்கினால் மட்டுமே இறந்த பின்பும் பேர் சொல்லும் மனிதனாக இருக்க முடியும். இதை இப்படி விளக்கினால் சரி வராது.

  “கனவு காண வேண்டும், உறக்கத்தில் வருவதல்ல கனவு, உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு” என்று உரிமையாய் அவர் நேசித்த மாணவர்களுக்கும் இளைஞர் பெருமக்களுக்கும் எடுத்துச் சொல்லி சென்றவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள். அவர் இறந்த போதும் இன்னும் மனச் சுவற்றில் அவர் உதிர்த்த வார்த்தைகள் நிலைத்து நிற்கிறது.

  பிறப்பும் தொடக்க கல்வியும் 

  அப்துல் கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் நாள் ஜெய்னுல்லா ஆஃப்தினுக்கும் ஆஷி அம்மாவுக்கும் மகனாக பாம்பன் தீவில் உள்ள இராமநாதபுர மாவட்டத்தில் இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் இஸ்லாமிய  குடும்பத்தைச் சேர்ந்தவர். 

  இராமேஸ்வரத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் தனது படிப்பை தொடங்கினார். குடும்ப வறுமையின் காரணமாக சிறு வயது முதலே வேலைக்குச் சென்று படித்து வந்தார். அதிகாலையில் முன்னதாக எழுந்து செய்தி தாள்களை விநியோகம் செய்து பின்பு பள்ளிக்கு திரும்புவார். பள்ளி முடித்து வந்ததும் காலையில் செய்தித்தாள்கள் விநியோகம் செய்ததற்கான பணத்தை பெறச் செல்வார். 

  கல்லூரி வாழ்வும் மாறிய மனமும்

  அப்துல் கலாம் தனது பள்ளிப் படிப்பை முடித்தப் பிறகு, திருச்சிராப்பள்ளியில் சென்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பாடம் எடுத்து படித்தார். பின்பு இவர் 1955 ஆம் ஆண்டு சென்னை ஐ ஐ டி யில் விண்வெளி மற்றும் பொறியில் ஆராய்ச்சி படிப்பை தேர்வு செய்து படித்தார். 

  பணிகளும் பாராட்டுகளும் 

  அப்துல் கலாம் 1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி பிரிவில் ( DRDO ) தனது முதல் பணியைத் தொடங்கினார். அதில் அவர் முதல் கட்டமாக ஒரு சிறிய வகை ஹெலிகாப்டரை இந்திய இராணுவத்திற்கு வடிவமைத்துக் கொடுத்தார். பிறகு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தனது விண்வெளி ஆராய்ச்சி பணிகளைத் தொடங்கினார் அப்துல் கலாம். மேலும் துணைக்கோள் ஏவுதல் பிரிவிலும் தனது தன்னலமற்ற பங்கினை சிறப்பாக ஆற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV 3 துணை ஏவுகணையை விண்ணில் செலுத்தி இந்தியாவிற்கு புதிய பெருமையை தேடித் தந்தார். இந்த பெரும் செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு நாட்டின் உயரிய விருதான ‘பத்ம பூஷன்’ விருதை வழங்கி கௌரவித்தது.

  1963 முதல் 1983 மூன்று வரை இஸ்ரேல் அமைப்பில் தந்து தன்னலமற்ற சேவையை செய்து இந்தியாவிற்கு தனிப்பெரும் பெருமையை தேடித் தந்தார். 1999 ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையிலும் அக்னி ப்ரித்வி ஆகாஸ் போன்ற ஐந்து அணு ஆயுத திட்டங்களிலும் தனது பெரும் பங்கினை ஆற்றினார். இந்தியாவின் அணு ஆயுத வலிமைக்கு இவை ஆற்றிய பங்கு அறிதும் பெரிதும் கூட. 

  குடியரசு தலைவர் பி ஜே அப்துல் கலாம்:

  2002 ஆம் ஆண்டு குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று ஜூலை 25 ஆம் நாள் இந்திய நாட்டின் 11-வது குடியரசு தலைவரானார் அப்துல் கலாம். இவர் குடியரசு தலைவர் ஆவதற்கு முன்னரே நாட்டின் இன்னொரு மிகப் உயரிய ‘பாரத ரத்னா’ விருதை வழங்கி மத்திய அரசு இவரை கௌரவித்தது. இதனால் இவர் பாரத ரத்னா விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெயரையும் பெற்றார். 2007 வரை குடியரசு தலைவராக இருந்த இவரை ‘மக்களின் ஜனாதிபதி’ என்று மக்கள் அன்போடு அழைத்தனர். 2007 ஆம் ஆண்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட நினைத்த இவர் பல்வேறு காரணங்களால் அவர் அந்த தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்தார். 

  மாணவர்களுக்காக பயணம்: 

  தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவெடுத்த கலாம், தனது வாழ்வை மேலும் அர்ப்பணிக்க மாணவர்கள் மற்றும் இளைஞருக்கான தன்னம்பிக்கை மற்றும் உத்வேகத்தை கொடுக்க வேண்டுமென்று பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நல்லுரைகளை ஆற்றினார். 

  கலாமின் மறைவு:

  அவருக்கு பிடித்தமான விடயத்தை செய்யும் போது தான் அவர் மறைந்தார். குறிப்பாக சொல்லப் போனால் அவருக்கு மாணவர்களிடம் உரையாடுவது மிகவும் பிடிக்கும். மேகலாயாவில் உள்ள ஒரு பள்ளியில் தனது உரையை ஆற்றிக் கொண்டிருந்தார், அப்போது மாரடைப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

  கலாம் பெற்ற மிகப் பெரிய விருதுகள்:

  • 1981 – பத்ம பூஷன் 
  • 1990 – பத்ம விபூஷண் 
  • 1997 – பாரத ரத்னா 

  கலாம் எழுதிய நூல்கள்:

  • அக்னிச் சிறகுகள் 
  • இந்தியா 2020 
  • எழுச்சி தீபங்கள் 
  • அப்புறம் பிறந்தது புதிய குழந்தை 

  கலாம் திருமணமே செய்துக் கொள்ளவில்லை, மக்களுக்காக மட்டுமே வாழ்ந்தவர். மறைந்தாலும் அவர் உதிர்த்து விட்டுச் சென்ற வார்த்தைகள் யார் மனதில் நிற்கிறதோ இல்லையோ மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மனதில் என்றும் வேரூன்றி விட்ருட்சமாகும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இந்திய நாட்டின் வளர்ச்சியே அவரின் உயிர் மூச்சு. 

  ஒரு மனிதன் இப்படியும் இருக்க முடியுமா என்ற கேள்விக்கு சிறந்ததொரு பதில் தான் கலாமின் வாழ்க்கை.

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....