Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்"வரவு எட்டனா செலவு பத்தனா" நிலையை போக்க வேண்டுமா? இதைப் படியுங்கள்!

    “வரவு எட்டனா செலவு பத்தனா” நிலையை போக்க வேண்டுமா? இதைப் படியுங்கள்!

    “வரவு எட்டனா செலவு பத்தனா” என்ற நிலை அனைத்து வீடுகளிலும் உள்ளது. அதுவும் நடுத்தர வர்க்க குடும்பத்தில் இந்நிலை அதிகம் காணப்படும். ஏழை குடும்பத்திலிருந்து பணக்காரக் குடும்பம் வரை அவரவர் தேவைக்கேற்ப வரவுகளும் செலவுகளும் வருகின்றன.

    முதலில் குடும்ப பட்ஜெட் எந்த அளவுக்கு அவசியம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சிலர் ஒழுங்கான பட்ஜெட் போட்டு குடும்பத்தை நடத்துகின்றனர். சிலர் வருங்காலத் தேவைக்காகவும் சேர்க்கின்றனர். சிலர் வரிசையாக பட்ஜெட் போட்டாலும் முறையாக செயல் படுத்த தெரியாமல் பணத்தை விண் செய்கின்றனர்.

    உங்கள் குடும்ப செலவுகளை பட்ஜெட் போட்டு மேற்கொள்ளும் போது, பணத்தை திட்டமிட்டு செலவு செய்வீர்கள். அது, அனாவசிய செலவுகளை குறைக்கும்; மேலும் சேமிப்புக்கும் வழிவகுக்கும். உங்கள் பணம், எந்தெந்த விதங்களில் செலவு செய்யப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள, குடும்ப பட்ஜெட் உதவும்.

    அத்தியாவசியம்தான் முதல் தேவை :

    குடும்ப பட்ஜெட் போடும்போது எது தேவை, எது தேவையற்றது என பட்டியல் போட்டு செலவு செய்ய வேண்டும்.

    இன்றைய சமுதாயத்தில் சம்பளம் உயர உயர அதற்கான செலவையும் ஏற்றி கொள்கின்றனர். இதனால் தற்பொழுதைய தேவையைக் கூட நிறைவேற்றி கொள்ள முடியாமல் தவிக்கும் மக்கள் பலரை நாம் அன்றாட வாழ்க்கையில் பார்த்து வருகிறோம்.

    மாத பட்ஜெட்டில் 70 சதவீதம் சமையல் அறையோடு தொடர்புடையதாக இருக்கிறது. அங்கு முடிந்த அளவு செலவைக் குறைக்க திட்டமிடவேண்டும். சமையல் பொருட்கள் ஒவ்வொன்றும் தீர்ந்துபோகும்போது அதற்கான பட்டியல் ஒன்று ரெடி செய்து வைத்திடவேண்டும்.

    பெரும்பாலான வீடுகளில் உளுந்து, பருப்பு, பயறு, தேயிலை, காபி போன்றவை அதிக அளவில் செலவாகின்றன. அவைகளை மொத்தமாக வாங்குங்கள். பிராண்டட் கோதுமை மாவு வாங்கும் விலையில் பாதி செலவிட்டாலே, தரமான கோதுமை வாங்கி சுயமாக அரைத்து பயன்படுத்திவிடலாம்.

    பிராண்டட் அரிசியில் சிறிய மூட்டை ஒன்றை அதிக விலை கொடுத்து வாங்குவதைவிட, அரிசி மொத்த வியாபாரியிடம் சென்று தரம் பார்த்து அரிசியை வாங்கி பணத்தை மிச்சப்படுத்தலாம்.

    அசைவ உணவை விரும்புகிறவர்களின் வீடுகளில் இறைச்சி மற்றும் மீனுக்கு அதிக பணம் செலவாகிறது. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டும் அதை சாப்பிடுங்கள். அதையும் அளவோடு சாப்பிடுங்கள்.

    அதனால் அசைவ உணவுக்கான செலவை குறைக்க முயற்சி செய்யுங்கள். அது உங்கள் பட்ஜெட்டுக்கு பலனளிக்கும். உடலுக்கும் நன்மைதரும்.

    சமையல் எரிவாயு செலவிலும் கவனம் செலுத்தவேண்டும். மறுநாள் என்ன சமைக்கப்போகிறீர்கள் என்பதை முதல் நாள் இரவிலே முடிவு செய்யுங்கள். காலையில் சமையல் தேவைக்கான பொருட்கள் அனைத்தையும் எடுத்துவைத்துக்கொண்டு அடுப்பை பற்றவையுங்கள். அப்படி செய்தால் சமையல் எரிவாயு வீணாகுவதை தவிர்க்கலாம்.

    பிரஷர் குக்கர் எரிவாயுவையும், சமையல் நேரத்தையும் மிச்சப்படுத்தும். பால், தண்ணீர், டீ போன்றவைகளை அடிக்கடி சூடு செய்வதை தவிர்க்க, பிளாஸ்குகளை பயன்படுத்தும் பழக்கத்தை உருவாக்குங்கள்.

    நீங்கள் ஏடிஎம் மூலம் எடுக்கும் பணம் உங்கள் பாக்கெட்டை விட்டு மிகுதியாக கரைகிறது என்றால் கவனம் தேவை. அதற்கு உங்கள் செலவை பற்றிய கணக்கையும் குறிப்பையும் வைத்து கொள்ளுங்கள்.

    எது அத்தியாவசியம் எது ஆடம்பரம் என்று தெரியாமல் ஆடம்பர செலவை தேவையான செலவு என்று எண்ணி பணத்தை இழப்பதை தவிர்க்கவும். உங்கள் சம்பளத்தின் 80 சதவிகிதத்திற்கு மேல் செலவு செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள். முதலில் உங்கள் செலவை ஆராய கற்றுக்கொள்ளுங்கள்

    ஒவ்வொரு மாதமும் பட்ஜெட் போடும் போது, ஒரு குறிப்பிட்ட தொகையை அவசர அல்லது எதிர்பாராத செலவுகளுக்கு என, ஒதுக்கி வைப்பதை வழக்கமாக கொண்டிருக்க வேண்டும்.

    உங்கள் வரவு செலவு உங்களுக்குதான் தெரியும். அதை உணராமல் அதிக பேராசை உங்களை வீழ்த்தி விடும் என்பதை மறந்து விடாதீர்கள். வரவுக்கேற்ற செலவுதான் புத்திசாலிக்கு அழகு.

    பனிக்குடம் உடைய இருப்பதை முன்னமே அறிவதற்கான அறிகுறிகள் இதோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....