Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவிவசாயி கழுத்தை நெறித்து கொலை; குற்றாலத்தில் பரபரப்பு!

    விவசாயி கழுத்தை நெறித்து கொலை; குற்றாலத்தில் பரபரப்பு!

    நாட்டில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது வாடிக்கையாகி விட்டது. அதிலும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தினசரி செய்திகளில் வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

    இந்நிலையில், புதியதாய் உதயமான தென்காசி மாவட்டத்தில், வயதான முதியவரை கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருகே, முதியவர் ஒருவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். இந்த கொலைச் சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் அருகேயுள்ள இலஞ்சி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோட்டைமாடன். இவர் ஒரு விவசாயி என்பது குறிப்பிடத்தக்கது.

    விவசாயி கோட்டைமாடனுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவருக்கு சொந்தமாக மாந்தோப்பு உள்ளது. இந்நிலையில், புதன்கிழமை அதிகாலையில் கோட்டைமாடன் தனக்கு சொந்தமான மாந்தோப்புக்கு சென்றுள்ளார். பின்னர், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத காரணத்தால், குடும்பத்தினர் சந்தேகமடைந்தனர். உடனே, அவர்கள் மாந்தோப்புக்கு சென்று பார்த்துள்ளனர்.

    அப்போது, விவசாயி கோடடைமாடன் வாயில் துணி கட்டப்பட்ட நிலையில், சுயநினைவின்றி கீழே விழுந்ததைப் பார்த்து குடும்பத்தினர் பதறிப்போயினர். பின்னர், அருகே சென்று பார்த்த போது தான் தெரிந்தது, அவரை யாரோ கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர் என்று.

    இதனைக் கண்டு பேரதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர், குற்றாலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், காவல் துறையினர் நேராக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கோட்டைமாடன் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து, விவசாயி கோட்டைமாடன் கொலை சம்பவம் தொடர்பாக இவரது மகள் சந்திரா அளித்த புகாரின் பேரில், குற்றாலம் காவல் துறை வழக்குப்பதிவு செய்தனர். முதியவரை கழுத்தை நெறித்து கொலை செய்த நபர்கள் குறித்தும், அவரது கொலைக்கான காரணம் குறித்தும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயி கோட்டைமாடனின் கொலைச் சம்பவம், இலஞ்சி காளியம்மன் கோவில் தெருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செவ்வாய் கிழமைகளின் ஏன் முடித்திருத்தம் செய்தல் கூடாது? – தெரிந்துக்கொள்ள படியுங்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....