Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்ஆரோக்கியம்ஹோல் 30 (Whole 30) டயட் என்றால் என்ன? இது உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்ததா?

    ஹோல் 30 (Whole 30) டயட் என்றால் என்ன? இது உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்ததா?

    ஹோல் 30 என்பது, தற்போது மிகவும் பிரபலம் அடைந்து வரும் ஒரு வகை டயட் முறையாகும். இந்த டயட்டில் உள்ள நிறை குறைகளை தெரிந்து கொள்வதற்கு முன்பே பலரும் இதனை பின்பற்றி வருகின்றனர்.

    சில உணவு வகைகள், நமது உடலின் ஆரோக்கியத்தை எதிராக செயல்படும் என்ற எண்ணத்தில் முழு 30 (Whole 30) டயட் உணவு முறை உருவாக்கப்பட்டு உள்ளது. இது ஒரு வகையில் உண்மையும் கூட. ஆனால், பெரும்பாலான மக்கள் தங்கள் உடல் எடையை குறைக்கும் நம்பிக்கையில் இந்த டயட்யை பின்பற்றுகின்றனர்.

    இது ஒரு மாதம் எடுத்து கொள்ளப்படும் சுத்தமான உணவு திட்ட முறையாகும். இது 2009 ஆம் ஆண்டில், இரண்டு சிறந்த ஊட்டச்சத்து நிபுணர்களால் உருவாக்கப்பட்டது.

    அவர்கள் நமது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை மீட்டமைப்பதற்கும், சரியான உணவை நமது உடலுக்கு வழங்குவதற்கும் சிறந்த வழியாக இந்த டயட் முறையை அவர்கள் இருவரும் கொண்டு வந்தனர்.

    இந்த டயட் முறையை பின்தொடர்பவர்களின் உடல் எடையை குறைக்கவும், அவர்கள் உடலின் ஆற்றலை அதிகரிக்கவும், மற்றும் தங்கள் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத சிக்கலான உணவுகளை அடையாளம் காணவும் இது உதவுகிறது என்று நம்புகின்றனர்.

    ஹோல் 30 டயட் உணவு முறையில் சேர்த்து கொள்ளவேண்டிய உணவுகள்:
    • பன்றி இறைச்சி, குதிரை, ஆட்டுக்குட்டி, கோழி, வான்கோழி, வாத்து மற்றும் மாட்டிறைச்சிகள்.
    • மீன், இறால், கலமாரி (calamari), ஸ்காலப்ஸ், நண்டு, இரால் (lobster) போன்றவை.
    • எல்லா வகையான முட்டைகள்.
    • அனைத்து வகையான பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்து கொள்ளலாம் (பீன்ஸ் மட்டும் தவிர்க்கவும்).
    • வேர்க்கடலையை தவிர மற்ற பருப்பு வகை தானியங்களை உட்கொள்ளலாம்.
    • ஆரோக்கியமான தாவர எண்ணெய்கள், தேங்காய் எண்ணெய்,வெண்ணெய் மற்றும் நெய் போன்றவை.
    ஹோல் 30 டயட் உணவு முறையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
    • சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்புகள்
    • ஆல்கஹால்
    • சோயா பொருட்கள்
    • கோதுமை, சோளம், ஓட்ஸ் மற்றும் அரிசி உள்ளிட்டவை தவிர்க்கப்பட வேண்டும்.
    • வேர்க்கடலை வெண்ணெய் உள்ளிட்ட பெரும்பாலான பட்டாணி, பயறு மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
    • மாடு, ஆடு மற்றும் ஆடுகளின் பால், தயிர், சீஸ், ஐஸ்கிரீம் மற்றும் பால் பொருட்களிலிருந்து பெறப்பட்ட பிற பொருட்கள் உட்பட அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.
    • தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் அல்லது நெய் மட்டும் எடுத்து கொள்ளலாம்.
    • பதப்படுத்தப்பட்ட உணவுகளையோ பனங்களையோ எடுத்து கொள்ள கூடாது.

    “ஹோல் 30 (Whole 30) டயட் ,உணவு முறையில் பழங்கள், காய்கறிகள், கொட்டைகள் மற்றும் விதைகள் போன்ற குறைந்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவு கவனம் செலுத்தப்பட்டுள்ளது நல்ல விஷயம் தான்.

    ஆனால், அதே நேரத்தில் இந்த டயட் முறையில் தானியங்கள், சோயா, பீன்ஸ் மற்றும் பயறு போன்ற பல ஆரோக்கியமான உணவுகள் தவிர்க்க படுவது நம் உடலுக்கு நல்லது அல்ல என்பதை நாம் உணர வேண்டும்.” என்று மருத்துவர்கள் கூறுகிறார்.

    ஹோல் 30 டயட் முறை நமது செரிமான மண்டலத்தை குழப்பமடைய செய்கிறது. ஏனெனில், சோயா உணவுகள் மற்றும் பருப்பு வகைகள், பீன்ஸ், பயறு, உலர்ந்த பட்டாணி போன்றவை நம் உடலுக்கு நன்மை அளிக்க கூடிய உணவுகள் ஆகும்.

    இவற்றில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் போன்ற உயர்தர ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளன. பொதுவாகவே, பருப்பு வகைகள் நமது குடலுக்கு மிக சிறந்த உணவாகும்.

    உங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளிக்க இவை உதவுவதால், கரையக்கூடிய மற்றும் கரையாத நார்சத்துக்கள் இரண்டிலும் பீன்ஸ் போன்ற உணவுகள் ஒரு ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிக்கு உணவளிக்க மிக முக்கியமானதாகும்.

    மறு அறிமுகம்: 

    உண்மையில் இந்த ஹோல் 30 டயட் முறையானது, மனிதனின் உணவு உட்கொள்ளும் முறையை தூண்டக்கூடும். டயட்டர்கள் முழுதாக 30 நாட்களை முடித்தவுடன், அவர்கள் தங்கள் உடலுக்கு ஒரு “மறு அறிமுகத்தை ” கொடுக்கின்றனர்.

    ஒரு மாதத்திற்கு அவர்கள் தவிர்த்த உணவு வகைகளை ஒவ்வொன்றாக மீண்டும் தங்களது உணவில் சேர்க்க ஆரம்பிப்பார்கள். இந்த கட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், டயட்டர்கள் உடம்பிற்கு ஒத்துக்கொள்ளாத உணவுக் வகைகளை இது சுட்டிகாட்டுவது தான்.

    ஆனால் நிலையான ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை வழங்கத் தவறியதால் இந்த ஹோல் 30 டயட் முறை திட்டம் சிக்கலானது என்று சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    “ஒரு உணவு முறையானது, உங்கள் முழு வாழ்க்கையையும் பராமரிக்கக்கூடிய ஒரு வழிமுறையாக இருக்க வேண்டும்.”

    “இது எடை இழப்பை மட்டும் குறிப்பது அல்ல. ஒரு ஆரோக்கியமான, துடிப்பான வாழ்க்கையை உங்களுக்கு அமைத்து தர வேண்டும்.”

    மீண்டும் ரொட்டி, பீட்சா அல்லது குக்கீகள் இல்லாமல் வாழ்க்கையை கடந்து செல்வது என்பது இன்றைய மக்களால் கண்டிப்பாக முடியாது என்பதால், பெரும்பாலானோர் இந்த நீண்ட கால ஹோல் 30 உணவுத் திட்டத்தை கைவிடுவார்கள்.

    டயட்யை விரும்புவார்கள் அல்லது எடையை குறைக்க நினைப்பவர்கள் உங்கள் வாழ்க்கை முறைக்கு உகந்த அல்லது தேவைப்படும் உணவு முறையை தேர்ந்து எடுப்பது மிக சிறந்தது.

    நீங்கள் எந்த உணவு முறையை பின்பற்றுவராக இருந்தாலும் முடிந்தவரை பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    பனிக்குடம் உடைய இருப்பதை முன்னமே அறிவதற்கான அறிகுறிகள் இதோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....