Monday, March 18, 2024
மேலும்
  Homeவாழ்வியல்ஆரோக்கியம்சருமத்தின் நிறத்தை அதிகரிக்க இயற்கையான முறையில் 10 அழகு குறிப்புகள்!

  சருமத்தின் நிறத்தை அதிகரிக்க இயற்கையான முறையில் 10 அழகு குறிப்புகள்!

  பொதுவாக கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது. இப்படி சருமத்தின் நிறம் கருமையாவதால், ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வருந்துகிறார்கள்.

  சரும நிறத்தை அப்படியே மொத்தமாக மாற்ற அறுவை சிகிச்சையினால் மட்டுமே முடியும். ஆனால் அவை மிகவும் தீங்கு விளைவிக்கும் முறை. பின்னாளில் உங்கள் சருமத்திற்கு அதிக பாதிப்புகளை உண்டாக்கும்.

  ப்ளீச் செய்வதாக இருந்தால் இயற்கை பொருட்களை மட்டுமே பயன்படுத்துங்கள். பார்லரில் உபயோகப்படுத்தம் படும் ரசாயனங்களால் உடனடியாக நிறம் பெற்றாலும் விரைவில் சருமம் முதிர்ந்துவிடும். சுருக்கங்கள் உருவாகி வயதான தோற்றத்தை பெற நேரிடும். உங்களுக்கு எளிதான வகையில் சருமம் நிறம் பெற குறிப்புகள் இத்தொகுப்பில் சொல்லப்பட்டுள்ளன. உபயோகப்படுத்திப் பாருங்கள்.

  டிப்ஸ்..

  1. தக்காளிப் பழத்தை தோல் நீக்கி அதனை நன்கு அரைத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்திற்கு பூசவும். இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச்சென்று மாறிவிடும்.

  2. காய்ச்சாத பாலை 1 ஸ்பூன் அளவு எடுத்து அதே அளவு ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவவும். தினமும் தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

  3. தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும். மேலும், இந்த முறையை தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.

  4. வெள்ளரிச் சாறு இயற்கையிலேயே ப்ளீச் செய்யும் சருமத்திற்கும் எந்த பாதிப்பு தராது. வெள்ளரிச் சாறுடன் சிறிது பால கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் குளிர்ந்த நீரினால் கழுவவும். தினமும் செய்ய வேண்டும்.

  5. சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி சரும துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி சருமம் பொலிவோடு காணப்படும்.

  6. உருளைக் கிழங்கின் சாறு எடுத்து தினமும் முகத்தில் பூசுங்கள். 5 நிமிடங்களில் கழுவ வேண்டும். இதே போன்று உருளைக்கிழங்கு பேஸ்டை அப்படியே முகத்தில் தடவலாம். அத்துடன் சிறிது பால் சேர்த்தும் முகத்த்தில் பேக் போடலாம்.இவ்வாறு தொடர்ந்து செய்தால் முகத்தின் நிறம் அதிகரிப்பதை நாம் காணலாம்.

  7. தேங்காய் தண்ணீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தை மசாஜ் செய்து 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகத்தில் உள்ள தழும்புகள் கருமை நீங்கி முகம் பளிச்சென்று வெள்ளையாகும். மேலும், நாம் தினசரி குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும். அடிக்கடி தண்ணீரை குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

  8. அரை டீஸ்பூன் தேனில் ஒரு சிட்டிகை பட்டைப் பொடியை கலந்து முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்யுங்கள். பின் முகத்தை கழுவிவிடுங்கள். இப்படி செய்தால் முகத்தின் நிறம் மாறும். மேலும் தயிரில் சிறிது கடலை மாவை கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவலாம்.

  9. ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம். இது சருமத்தில் உள்ள கருமைகளை நீக்குகிறது. குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து நன்றாக ஊறியவுடன் அந்த கலவையை முகத்தில் பேக் போட்டு காய்ந்ததும் கழுவி விடுங்கள்.

  10. பால் பவுடர், பப்பாளி, மற்றும் எலுமிச்சை சாறு மூன்றையும் கலக்கி முகத்தில் பேக் போல் போடுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். வாரம் இருமுறை இதனை பின்பற்றினால் உங்கள் முகம் நாளுக்கு நாள் மெருகு ஏறுவதை நிங்களே உணரலாம் .

  குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்; அரசு மருத்துவமனை மீது புகார்!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....