Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த சர்ச்சை - அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்

    தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த சர்ச்சை – அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்

    தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தாலும் கூட எந்தவிதமான புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில், 10, 11 மற்றும் 12 பொதுத் தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து, பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா அச்சம் காரணமாக, பொதுத் தேர்வுகள் நடைபெறாமல் இருந்த நிலையில், இந்தாண்டு, அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், பொதுத் தேர்வு நடந்து முடிந்துள்ளது.

    இதையடுத்து, தமிழகத்தில், 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டுக்காக, வரும் 13 ஆம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும், வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என்றும், ஆன்லைன் வகுப்பு முறை படிப்படியாக கைவிடப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. மேலும், கொரோனா தொற்று காலத்திற்கு முன்பு, பள்ளிகள் எவ்வாறு செயல்பட்டதோ, அதே பாணியில், மீண்டும் பள்ளிகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துக்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக கூறினார்.

    சென்னையில் 22 இடங்களில் பாதிப்பு அதிகளவில் உள்ளதாக கூறினார். தொற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் அதனை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

    மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் முகக்கவசம் அணியும் கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டதின் எதிரொலியாக தற்போது அங்கு தொற்று பரவல் அதிகரித்து வருவதாக கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் அப்படி எந்த ஒரு தளர்வு அளிக்கப்படவில்லை எனவும், அன்று முதல் இன்று வரை தமிழகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

    கொரோனா அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், கொரோனா பரவல் அதிகரித்து வந்தாலும் கூட எந்தவிதமான புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது என கூறினார்.

    தற்போது பாதிப்பு 100, 200 என்ற அளவில் மட்டுமே உள்ளதால் பள்ளிகள் திறப்பதில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும், திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் கூறினார். பூஸ்டர் டோஸ் கொரோனா தடுபூசிகளை ஒரு டோஸ் 388 ரூபாய் என்ற விலைக்கே விற்பனை செய்ய வேண்டும் எனவும், அதற்கு மேல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

    அதிரடியில் மிரட்டிய மில்லர், வெண்டர் டுசென்: முதல் டி20-யில் இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....