Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஅதிரடியில் மிரட்டிய மில்லர், வெண்டர் டுசென்: முதல் டி20-யில் இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா!

    அதிரடியில் மிரட்டிய மில்லர், வெண்டர் டுசென்: முதல் டி20-யில் இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா!

    இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்து, இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

    இன்னிங்ஸ்..

    இந்திய வீரர் கே.எல். ராகுல் காயம் காரணமாக இப்போட்டியில் பங்கேற்கவில்லை. இதனால், இந்திய அணியின் புதிய கேப்டனாக முதல் முறையாக ரிஷப் பண்ட் செயல்பட்டார். இந்திய அணியில் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். தொடக்க வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷன், அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.

    பிறகு, கேஷவ் மஹராஜ் வீசிய ஒரே ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளை பறக்க விட்டார். அந்த ஒரே ஓவரில் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 48 பந்துகளை சந்தித்து 76 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார் இஷான் கிஷன்.

    ஸ்ரேயாஸ் ஐயர் 27 பந்துகளை சந்தித்து 36 ரன்கள் அடித்தார். ரிஷப் பண்ட் 16 பந்தில் 29 ரன்களை அடித்தார். டெத் ஓவர்களில் அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்டியா 12 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 31 ரன்கள் அடித்து ஸ்கோரை உயர்த்தினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 2 பந்துகளில் 1 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இஷான் கிஷனின் அதிரடியான அரைசதம், ஹர்திக் பாண்டியாவின் அதிரடி ஃபினிஷிங்கால் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்களை குவித்தது இந்தியா. பிறகு, 212 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த குயின்டன் டி காக் – டுவைன் பிரிட்டோரியஸ் இணை மிகவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    அதன்பின் 29 ரன்களில் பிரிட்டோரியஸ் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 22 ரன்களில் விக்கெட்டை இழந்தார் குயின்டன் டிகாக். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரஸ்ஸி வெண்டர்டுசென் மற்றும் டேவிட் மில்லர் இணை தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர்.

    அதன்பின்னர், அதிரடியில் இறங்கிய டேவிட் மில்லர் வானவேடிக்கை காட்டினார். 22 பந்துகளில் அரைசதத்தைக் கடந்து, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அதுவரை பொறுமையாக விளையாடிய வெண்டர் டுசென், ஹர்ஷல் படேல் வீசிய 17 ஆவது ஓவரில், தொடர்ந்து 3 சிக்சர்கள் மற்றும் 1 பவுண்டரியை விளாசி தனது அதிரடியைக் வெளிக்காட்டி அரைசதத்தைப் பதிவு செய்தார்.

    டேவிட் மில்லர் மற்றும் வெண்டர் டுசென் ஆகிய இருவரின் அதிரடி ஆட்டத்தால், தென்னாப்பிரிக்க அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் மில்லர் 64 ரன்களையும், வெண்டர் டுசென் 75 ரன்களையும் சேர்த்து வெற்றிக்கு வழிவகுத்தனர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மில்லர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்; அரசு மருத்துவமனை மீது புகார்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....