Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு180 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் - மாநகராட்சியில் கலந்தாய்வு கூட்டம்!

    180 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் – மாநகராட்சியில் கலந்தாய்வு கூட்டம்!

    கடலுார் மாநகராட்சி பகுதிகளில் ரூ. 180 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தவது தொடர்பாக, அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

    கடலுார் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் 27ல் முழுமையாகவும், 9 வார்டுகளில் பகுதியாகவும், மீதியுள்ள 9 வார்டுகளில்புதிதாகவும் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.180 கோடி ரூபாயில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்வது தொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது

    இக்கூட்டத்திற்கு மேயர் சுந்தரி தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர். குடிநீர் வடிகால் வாரியம், மின்துறை அதிகாரிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் பலரும் பங்கேற்றனர். கூட்டத்தில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவது குறித்து அதிகாரிகள் பேசினர். அப்போது, கவுன்சிலர்கள் கருத்து தெரிவிக்கையில், ஏற்கனவே பாதாளச் சாக்கடை முடிந்த இடங்களிலும் கழிவுநீர் வெளியேறி சாலைகளில் ஓடுகிறது.

    அதையும் சேர்த்து சீரமைக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தனர். விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அண்டார்டிக் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் மைக்ரோ பிளாஸ்டிக்..!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....