Sunday, March 17, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்பு20 ஆண்டுகளுக்கு மேலாக அரியர் வைத்திருப்பவர்கள் தேர்வு எழுதலாம் - அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி

    20 ஆண்டுகளுக்கு மேலாக அரியர் வைத்திருப்பவர்கள் தேர்வு எழுதலாம் – அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி

    2001-2002 ஆம் கல்வியாண்டில் இருந்து அரியர் வைத்திருப்பவர்கள் அரியர் தேர்வுகளை எழதலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. சமீபத்தில், வருகிற டிசம்பர் ஜனவரியில் நடப்பாண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடைபறவுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

    இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, 20 ஆண்டுகளுக்கு மேலாக அரியர் வைத்திருப்பவர்கள் வரும் டிசம்பர் மற்றும் ஜனவரியில் நடைபெறக்கூடிய செமஸ்டர் தேர்வோடு சேர்த்து எழுதிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

    மேலும், 2001-2002 ஆம் கல்வியாண்டில் 3 ஆவது செமஸ்டரிலிருந்தும், 2002-2003 ஆம் கல்வியாண்டில் முதல் செமஸ்டரிலிருந்தும் அரியர் வைத்தவர்கள் இந்த சிறப்புத் தேர்வை எழுதலாம் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த சிறப்புத் தேர்வை எழுத விரும்புபவர்கள் தேர்வு கட்டணத்துடன் ரூ. 5000 கூடுதலாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் http://www.coe1.annauniv.edu/ என்ற இணையதளத்தில் நவம்பர் 23 ஆம் தேதி முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    வரலாற்று வெற்றியைப் படைத்த ஸ்பெயின் மற்றும் ஜப்பான்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....