Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஎன்னது எலி கஞ்சா சாப்பிட்டுச்சா? அப்ப 581 கிலோவும் அபேலா? நீதிபதிகளுக்கு ஷாக் கொடுத்த காவல்துறை

    என்னது எலி கஞ்சா சாப்பிட்டுச்சா? அப்ப 581 கிலோவும் அபேலா? நீதிபதிகளுக்கு ஷாக் கொடுத்த காவல்துறை

    காவல் நிலைய கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 581 கிலோ கஞ்சாவையும் எலிகள் தின்றுவிட்டதாக மதுரா காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 

    இந்த ஆண்டு சிறப்பு போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் (கஞ்சா) காவல்நிலையக் கிடங்குகளில் வைக்கப்படுவது வழக்கம். அவ்வகையில், உத்தபிரதேசத்தில் உள்ள மதுரா காவல்நிலையத்தின் கட்டுப்பாட்டிற்குள்ளான கிடங்குகளில் 581 கிலோ கஞ்சாவை வைத்துள்ளனர்.

    இந்த பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா போதைப் பொருள் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது, மதுரா காவல்துறையினர், கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 581 கிலோ கஞ்சாவையும் எலிகள் சாப்பிட்டுவிட்டது என தெரிவித்தனர். 

    இதைக்கேட்ட,  நீதிபதிகள் திடுக்கிட்டனர். இதைத்தொடர்ந்து, நீதிபதிகள், எலிகளைப் பிடிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், உண்மையிலேயே ரூ.50 லட்சம் மதிப்புள்ள 581 கிலோ கஞ்சாவையும் எலிகள்தான் சாப்பிட்டுள்ளன என்பதற்கான ஆதாரத்தை திரட்ட வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

    மேலும், காவல்நிலைய கிடங்குகளில் வைக்கப்பட்டிருக்கும் போதைப் பொருள்களை அழிக்க ஐந்து வழிகாட்டு நெறிமுறைகளை நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதோடு, இச்சம்பவம் சார்ந்த விசாரணையை நவம்பர் 26-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

    முன்னதாக, இதுபோன்ற வழக்கில், 195 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்டதாகக் காவல்துறையினர் கூறியபோது, அதற்கான ஆதாரத்தை நீதிமன்றம் கேட்டது. ஆனால், ஆதாரத்தை காவல்துறையினரால் சமர்ப்பிக்க முடியவில்லை.

    பிரேமம் இயக்குநரின் அடுத்தப்படைப்பு; ரிலீஸ் தேதி இதுதானாம்….

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....